This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
Track your pregnancy journey

கர்ப்ப காலத்தில் பேரீச்சம் பழம்: பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் பிரசவ வலி தூண்டப்படுமா?

Diet & Nutrition
Written by - Avira Paraiyarகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Feb 15, 2026
கர்ப்ப காலத்தில் பேரீச்சம் பழம்: பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் பிரசவ வலி தூண்டப்படுமா?
Likes24 Likes|
Read time5 min

பல ஆயிரம் ஆண்டு வரலாறுகளைப் பார்க்கும் போது, பேரீச்சம் பழமானது உலகளவில் ஒரு பழமையான பயிராக கருதப்படுகிறது. மெட்ஜூல் பேரீச்சம் பழம், டெக்லெட் நூர் பேரீச்சம் பழம் என இது பல வகைகளில் காணப்படுகிறது.

கர்ப்ப காலத்தில் பேரீச்சம் பழம் சாப்பிடுவது குழந்தை மற்றும் தாய்க்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குவதால் இது ஏராளமான பலன்களை வழங்குகிறது.

கர்ப்ப காலத்தில் பேரீச்சம் பழத்தின் நன்மைகள்

பேரீச்சம் பழத்தில் வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் ஏராளமாக காணப்படுகிறது. மேலும், இவற்றில் உள்ள அதிக அளவிலான ஆன்டி-ஆக்சிடன்டுகள் உடலில் செல் குறைவதைத் தடுக்க உதவுகிறது. உங்களுக்கும், கருவில் உள்ள குழந்தைக்கும் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும்படி ஒரு சீரான உணவை உண்பது கர்ப்ப காலத்தில் அவசியம்.

1.நார்ச்சத்தின் மூலம்

பேரீச்சம் பழமானது வழக்கமான குடல் இயக்கத்தைத் தூண்டக்கூடிய ஒரு உணவு. நார்ச்சத்தின் ஒரு சிறந்த ஆதாரம். நான்கு பேரீச்சம் பழங்களில் 6.7 கிராம் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது. இது அன்றாடத் தேவையான 20 - 30 கிராம்களில் 25% ஆகும். ஹார்மோன் உற்பத்தி காரணமாக உணவுக்குழாயின் செயல்பாட்டைக் குறைக்கும் வழக்கமான கர்ப்ப கால அறிகுறியான மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் பெற உலர்ந்த பேரீச்சம் பழத்தை கர்ப்ப காலத்தில் சாப்பிட வேண்டும். பல கர்ப்பிணிப் பெண்கள் இரும்புச்சத்துக்காக எடுத்துக்கொள்ளும் சப்ளிமெண்டுகளும் மலச்சிக்கலை ஏற்படுத்தும்.

2.பொட்டாசியம் நிறைந்தது

திரவ சமநிலையை பராமரிக்கவும், வழக்கமான செல் செயல்பாட்டை ஆதரிக்கவும் பொட்டாசியம் உதவுகிறது. முதல் டிரைமெஸ்டரில் பல கர்ப்பிணிப் பெண்கள் வாந்தியால் அவதிப்படுவதுண்டு. இது பொட்டாசியம் அளவுகள் குறைய வழிவகுக்கும். கர்ப்ப காலத்தில் பேரீச்சம் பழம் சாப்பிடுவது உடலில் உள்ள பொட்டாசியம் அளவுகளை சீராக்க உதவும்.

3.அதிக ஃபோலேட் உள்ளது

கர்ப்பிணிப் பெண்களுக்கு அவசியமான முக்கியமான ஒரு பி வைட்டமினான ஃபோலேட் பேரீச்சம் பழத்தில் உள்ளது. தீவிரமான பிறப்பு குறைபாடான முதுகெலும்பு பிளவு (spina bifida) ஏற்படுவதை தடுப்பதில் ஃபோலேட் முக்கிய பங்கு வகிக்கிறது. கர்ப்பிணிப் பெண்களின் அன்றாட ஃபோலேட் தேவையான 600 மில்லிகிராமை பூர்த்தி செய்ய மருத்துவர்கள் அவர்களை ஃபோலிக் ஆசிட் சப்ளிமெண்ட்ஸ் எடுக்க பரிந்துரைக்கின்றனர். 100 கிராம் பேரீச்சம் பழத்தில் 15 எம்சிஜி ஃபோலேட் காணப்படுகிறது.

4.இரும்புச்சத்துக்கான ஆதாரம்

கர்ப்பமாக உள்ள பெண்களுக்கு சாதாரண பெண்களை விட இரண்டு மடங்கு இரும்புச்சத்து தேவைப்படுகிறது. ஏனெனில், கர்ப்பிணிப் பெண்களுக்கு இரத்த சோகை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். தீவிரமான இரும்புச்சத்து குறைபாடு குறைப்பிரசவம், குறைந்த பிறப்பு எடையுடன் கூடிய குழந்தை, கர்ப்ப காலத்திற்கு பிந்தைய மன அழுத்தம் போன்றவற்றிற்கு வழிவகுக்கும். இரத்த சோகையை விரட்டும் இரும்புச்சத்து பேரீச்சம் பழத்தில் ஏராளமாக உள்ளது.

5.குறைந்த ஜிஐ

பேரீச்சம் பழத்தில் குறைந்த கிளைசீமிக் இன்டக்ஸ் (ஜிஐ) காணப்படுகிறது. இது மெதுவாக செரிமானம் ஆகிறது மற்றும் இதன் மூலம் இரத்த சர்க்கரை அளவில் ஏற்படும் திடீர் அதிகரிப்பை தடுக்கிறது என்பதே இதற்கான அர்த்தம். அதிக சர்க்கரை அளவுகளை உள்ளடக்கிய நீரிழிவு நோயானது 10% கர்ப்பிணிப் பெண்களை பாதிக்கிறது. இது முன்கூட்டிய பிரசவ வலி மற்றும் வழக்கத்தை விட அதிக எடையுடன் பிறக்கும் குழந்தை போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

6.சர்க்கரைக்கு சிறந்த மாற்று

சர்க்கரைக்கு பதிலாக பேரீச்சம் பழத்தை பயன்படுத்தலாம். உலர்ந்த பேரீச்சம் பழங்களை புராஸஸ் செய்வதன் மூலம் பேரீச்சம் பழ சர்க்கரை தயாரிக்கப்படுகிறது. இது சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் சுகாதார உணவு நிலையங்களில் கிடைக்கிறது. வழக்கமான சர்க்கரையை விட இதில் 30% குறைந்த சர்க்கரை காணப்படுகிறது.

கர்ப்ப காலத்தில் பேரீச்சம் பழம் சாப்பிடும் போது எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

  • கர்ப்ப காலத்தில் பேரீச்சம் பழம் சாப்பிடுவது பாதுகாப்பானது மட்டும் அல்ல, ஆரோக்கியமானதும் கூட. கர்ப்பிணிப் பெண்களின் முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது டிரைமெஸ்டரில் பேரீச்சம் பழம் சாப்பிடுவது ஆபத்தானது என்பதை நிரூபிக்க எந்த ஒரு ஆதாரமும் இல்லை.

  • பிரபலமான நம்பிக்கைக்கு மாறாக, கர்ப்ப காலத்தில் பேரீச்சம் பழம் சாப்பிடுவது தாயின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, அவர்களை நன்றாக உணர வைக்கும். இது குறிப்பாக குறைந்த ஸ்டாமினா மற்றும் மலச்சிக்கல் பிரச்சனை உள்ள பெண்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

  • பேரீச்சம் பழத்திற்கு ஏற்படும் ஒவ்வாமை மட்டுமே கர்ப்ப காலத்தில் பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் ஏற்படும் ஒரு பக்க விளைவு ஆகும். உதடுகள் அல்லது நாக்கை சுற்றி கூச்சம், அரிப்பு, அல்லது வீக்கம் ஏற்படுவது இந்த ஒவ்வாமை வினைக்கான சில அறிகுறிகள் ஆகும்.

இதையும் படிக்கலாமே! - கர்ப்ப காலத்தில் சப்போட்டா சாப்பிடுவது பாதுகாப்பானதா?

பேரீச்சம் பழம் பிரசவத்தை தூண்ட உதவுமா?

  • பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் பிரசவ வலி தூண்டப்படும் என்று நீண்ட காலமாக பலரால் நம்பப்பட்டு வருகிறது. கர்ப்ப காலத்தில் பேரீச்சம் பழம் சாப்பிடுவது பிரசவ வலியை குறைக்குமே தவிர, அதனை தூண்டாது. 200 கர்ப்பிணிப் பெண்களைக் கொண்டு 2013 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், பேரீச்சம் பழம் சாப்பிடுவது பிரசவத்திற்கு கருப்பைவாயை தயாராகவும், கருப்பைவாயை மென்மையாக்கவும் உதவும் என்பது கண்டறியப்பட்டது.

  • பிரசவ தேதி வருவதற்கு 4 வாரங்களுக்கு முன்பில் இருந்து ஒவ்வொரு நாளும் 6 பேரீச்சம் பழம் சாப்பிட்ட கர்ப்பிணிப் பெண்களின் முதல் கட்ட பிரசவம் குறுகியதாகவும், பிரசவத்திற்கு முன்பு கருப்பைவாய் மிகவும் மென்மையாக மாறியதும் மற்றுமொரு ஆய்வில் கண்டறியப்பட்டது. மேலும், கர்ப்பத்தின் கடைசி சில மாதங்களில் பேரீச்சம் பழம் சாப்பிடுவது, பிரசவ வலியைத் தூண்டும் அல்லது விரைவுப்படுத்தும் ஒரு ஹார்மோனான ஆக்சிடாஸின் தேவையைக் குறைக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

கர்ப்ப காலத்தில் பேரீச்சம் பழம் சாப்பிடுவது பாதுகாப்பானதா?

சர்க்கரை சாப்பிட வேண்டும் என்ற ஆசையைக் குறைக்க கர்ப்பிணிப் பெண்கள் பேரீச்சம் பழத்தை ஸ்நாக்ஸ் போல சாப்பிட்டு வரலாம். கர்ப்ப காலத்தில் ஐஸ்கிரீம் அல்லது இனிப்புகளை விட பேரீச்சம் பழங்கள் சிறந்த தேர்வுகளாகும். தாய் மற்றும் குழந்தைகள் இடையே நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், அதிக சர்க்கரை கொண்ட உணவுகளை கர்ப்ப காலத்தில் சாப்பிடுவது குழந்தையின் மூளை செயல்பாட்டினை பாதிக்கலாம். மாறாக இயற்கை சர்க்கரை கொண்ட பேரீச்சம் பழங்களை சாப்பிடுவது அதிக ஐகியூ (IQ) அளவுகளுடன் தொடர்புடையதாகும். கர்ப்ப காலத்தில் பேரீச்சம் பழம் சாப்பிடுவது ஒன்றுக்கு மேற்பட்ட பலன்களை வழங்குகிறது. எனினும், இந்த சுவையான உலர்ந்த பழத்தை சாப்பிடுவதற்கு முன் மருத்துவர் மற்றும் உணவு நிபுணரை ஆலோசிப்பது நல்லது.

Is this helpful?

thumbs_upYes

thumb_downNo

Your parenting partner
in your pocket.

Access 24/7 expert tools, trackers, and a
supportive community.
Mylo App Banner

Your parenting partner
in your pocket.

Access 24/7 expert tools, trackers, and a
supportive community.
Apple App StoreGoogle Play Store
Apple App StoreGoogle Play Store

Article Posted Under

Helpful Tools & Calculators

undefined icon
Pregnancy Calendar
See baby growth week by week
arrow_right
undefined icon
Mylo Store
Shop for mom & baby
arrow_right
undefined icon
Pregnancy Diet Chart
Trimester & region-wise diet plan
arrow_right
undefined icon
Mamasutra
Safe positions for pregnancy
arrow_right
undefined icon
Save Memories
Store baby's photos & firsts
arrow_right
undefined icon
Weight Tracker
Monitor your weight
arrow_right
undefined icon
Zordar Dadi Ke Nuskhe
Gharelu nushke that work
arrow_right
undefined icon
My Calendar
Predict periods & record symptoms
arrow_right
undefined icon
Ovulation Calendar
Know your monthly cycle
arrow_right
undefined icon
Pill Reminder
Get reminded for medicines
arrow_right
undefined icon
Vaccination Tracker
Never miss a vaccine date
arrow_right
undefined icon
Make Baby Sleep
Play white noise & sleep music
arrow_right
undefined icon
Pregnancy Music
Play calming music for baby
arrow_right
undefined icon
Baby Diet Chart
Age-wise food plans for baby
arrow_right
Avira Paraiyar
Avira Paraiyar

Related Articles

Questions about this article

  • Asked when 5 weeks pregnant

    Q Here is a short, meaningful Muslim story with a moral: --- The Story of the Date Seed In a small village, there lived an old man named Yusuf. Every morning after Fajr prayer, he walked quietly to a barren patch of land behind his house. One day, a young boy named Ahmad noticed him digging small holes in the soil. Curious, Ahmad asked, “Uncle Yusuf, what are you doing?” Yusuf smiled and showed him a handful of date seeds. “I am planting these, my son.” Ahmad frowned. “But Uncle, you are old. These trees won’t grow big enough for you to eat their fruit.” Yusuf nodded slowly. “That is true, Ahmad. But tell me something—when I was your age, who planted the trees whose shade and fruit I enjoy today?” Ahmad thought for a moment and said, “The people before you…” Yusuf replied, “Exactly. They planted for us, not for themselves. So I plant for those who will come after me. Allah loves those who do good, even if no one sees it.” Years later, long after Yusuf had passed away, the barren land behind his house became a small grove of date palms. Children played in their shade, families harvested their fruit, and people still remembered the kindness of the old man who planted seeds he would never see grow. --- Moral of the Story Do good deeds sincerely for Allah, even if they benefit others more than you. Every small act of kindness becomes a form of ongoing charity (sadaqah jariyah). --- If you’d like, I can tell you: a Prophet story a moral story for kids a historical Islamic story or a longer inspirational tale Just tell me!

Related Topics

Recently Published Articles

Your body needs extra nutrition this trimester - these can help.

Medical Disclaimer

This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

foot top wavefoot down wave

AWARDS AND RECOGNITION

Awards

Mylo wins Forbes D2C Disruptor award

Awards

Mylo wins The Economic Times Promising Brands 2022

AS SEEN IN

Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on TOI
Mylo featured on inc42
Mylo featured on Business Standard
Mylo featured on YourStory
Mylo featured on ANI
Mylo Logo

Start Exploring

wavewave
About Us
Mylo_logo
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
  • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
  • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
  • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.