
கர்ப்ப காலத்தில் படியேறுதல் என்பது கர்ப்பிணிகளுக்கு ஒரு சிறந்த உடற்பயிற்சியாகும், ஏனெனில் படியேறுதல் அவர்களது தசைகளை வலுப்படுத்துவதுடன், ஸ்டாமினாவையும் அதிகப்படுத்தும். இது கர்ப்பிணிகள் புத்துணர்ச்சியான காற்றை சுவாசிக்கச் செய்வதுடன், அவர்களது மனதையும் லேசாக வைத்திருக்க உதவும் (இது கர்ப்ப காலத்தில் மிக அவசியம்). இத்துடன், தொடர்ந்து படியேறுதல் கர்ப்பிணிகளுக்கு இருக்கும் கூடுதல் கேலோரிகளை எரிக்க உதவும், வேறு அதிக உடல் உழைப்பு உள்ள பொழுதுப்போக்கு அல்லது ஹாபியில் ஈடுபட வேண்டிய அவசியம் இருக்காது, படியேறுதலே போதுமானதாக இருக்கும்.
ஆம், கர்ப்ப காலத்தின் மூன்றாம் டிரைமெஸ்டரில் படிகள் ஏறுதல் மிகுந்த பாதுகாப்பானது. கர்ப்பிணிப் பெண்கள் அவர்கள் கர்ப்ப காலம் ஆரோக்கியமாக இருக்கும் பட்சத்தில் தொடர்ந்து படிக்கட்டுக்களை உபயோகிக்கலாம். பெரும்பாலான மருத்துவர்கள் கர்ப்பிணிகளை எலிவேட்டர் உபயோகிப்பதற்கு பதிலாக படிக்கட்டுக்களை பயன்படுத்த சொல்வதன் நோக்கம் இது அவர்களுக்கு பிரசவத்தின் போது ஏற்படும் வலியை தாங்கிக்கொள்ளவும், தசைகளை வலுப்படுத்தவும் உதவும் என்பது தான். (இது உங்கள் குழந்தையை எளிதாக சுமக்க உதவும்).
கர்ப்பிணிப் பெண்கள் ஆரோக்கியமாக இருக்கும் வரை, படியேறுதல் என்பது தாயிற்கோ அல்லது குழந்தைக்கோ எந்தப்பதிப்பையும் ஏற்படுத்தாது. படிகளை மெதுவாக, கவனமாக ஏறுவது மயக்கம் வருதல் மற்றும் காயம் ஏற்படுதல் போன்றவற்றை தவிர்க்க உதவும். கர்ப்பிணிப் பெண் படியேறும் போது எப்போதாவது மயக்கம் வருவது போல உணர்ந்தால் அவர்கள் உடனே படியேறுதலை நிறுத்திவிட்டு, அவர்கள் குணமடையும் வரை ஓய்வெடுக்க வேண்டும். படிக்கட்டுகள் நீண்டதாகவும் வளைவுகளைக் கொண்டதாகவும் இருந்தால், கர்ப்பிணிப் பெண் அந்த நீண்டப் படிகளை ஏறுவதற்குப் பதிலாக அவசியம் எலிவேட்டரை உபயோகிக்க வேண்டும்.
படியேறுதல் கர்ப்பிணிப் பெண்களின் இடுப்பெலும்பை விரிவடையச் செய்யும், மேலும் குழந்தை தலைகீழாக திரும்பவும், ஆழாமாக சுகப்பிரசவத்திற்கு ஏதுவாக, கருப்பைவாயை அழுத்தி அதை விரிவாக்க உதவும். படியேறும் போது ஏற்படும் சமமில்லாத இயக்கம் குழந்தை சுற்றி, தலைகீழாக இடம்பெயர உதவும். கர்ப்ப காலத்தில் தொடர்ந்து படியேறுதல் கர்ப்பிணிகளை சுறுசுறுப்பாக வைக்கவும் அவர்களது இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தவும் உதவும். அதுமட்டுமின்றி, கர்ப்ப காலத்தில் தினசரி உடற்பயிற்சி செய்து உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும் பெண்கள் பிரசவத்தின் போது அவர்களது மனஅழுத்தம் மற்றும் உடல் சோர்வை கையாள தயாராக இருத்தல் வேண்டும்.
கர்ப்பிணிப் பெண் அல்லது கெஸ்டெஷனல் டயபிட்டீஸ் இருப்பதாக கண்டறியப்பட்ட பெண்கள், அவர்களின் மருத்துவர்களிடம் முதலில் பேசியப்பிறகு, அவர்கள் அறிவுறுத்தும் வரை நடைப்பயிற்சி செய்ய வேண்டும். ஆராய்ச்சியின் படி, கர்ப்பிணிப் பெண்ணால் ஒருநாளைக்கு குறைந்தபட்சம் 6000 படிகள் நடக்க முடியும். அதுமட்டுமின்றி, தொடர்ந்து உடற்பயிர்ச்சி செய்யும் போது குளுக்கோஸை பயன்படுவதால், அது சர்க்கரை அளவை பராமரிக்க உதவும்கிறது என்றும் ஆராய்ச்சி குறிப்பிடுகிறது. அதாவது நடைப்பயிற்சி அல்லது பிசியோத்தெரபிஸ்ட் பரிந்துரை செய்த மற்ற உடற்பயிற்சிகள் போன்ற நடுநிலை உடற்பயிற்சி, உங்கள் உடல் ஆரோக்கியத்தை பராமரித்து கர்ப்ப காலத்தில் வலுப்படுத்தவும் உதவும்.
கர்ப்பிணிப் பெண்கள் மது அருந்துவது ஆபத்தானது. கர்ப்பிணிப் பெண் அருந்தும் மது தொப்புள் கொடி வழியாகசென்று வளர்ந்து வரும் குழந்தையை பாதிக்கும். இதுவே கரு ஆல்கஹால் நோய்க்குறி எனக்கருதப்படுகிறது.
அதிக மெர்குரி செறிவு இருக்கும் உணவுகள் தவிர்க்கப்படவேண்டும். மீன், பதப்படுத்தப்படாத உணவுகள், பச்சை முட்டைகள் மற்றும் முளைக்கட்டியப் பயிர்கள். இன்னொருப்பக்கம், மீனில் மெர்குரி அளவு அதிமாக இருக்கும், இது குழந்தையின் பார்வை மற்றும் கேட்கும் திறனை பாதிப்பதால் பிரச்சனை தருவதாக இருக்கலாம்.
கர்ப்பமாக இருக்கும் போது கொஞ்சம் கஃபைன் சேர்த்துக்கொள்வதால் பிரச்சனையில்லையென்றாலும், அது பிளசெண்டா மூலம் குழந்தைக்கும் செல்லும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். சிலர் அதிக அளவுகள் கஃபைன் சேர்த்துக்கொள்வதால் கருச்சிதைவு ஏற்படும் என்றும் சொல்வதுண்டு, ஆனால் அது இன்னும் நிரூபிக்கப்படவில்லை.
கர்ப்ப காலத்தில் மருத்துவர் பரிந்துரையின்றி மருந்துக்கடையில் நேரடியாக மருந்து மற்றும் மாத்திரை வாங்கி சாப்பிடுதல் (ஓடிசி/OTC) ஆபத்தாக இருக்கலாம். பிறப்பதற்கு முன்பு குழந்தை தாயின் இரத்தத்தை பகிர்வதே இதன் முக்கிய காரணம். மருந்துகள் பிளசென்டா மூலம் சென்று இரத்த ஓட்டம் மூலம் குழந்தையின் ஆரோக்கியத்தை பாதிக்கும். கர்ப்பமாக இருக்கும் போது, உங்கள் மகப்பேறு மருத்துவர் பரிந்துரைப்பது அல்லாத எந்தவொரு பிரிஸ்கிரிப்ஷனும் முழுவதும் பாதுகாப்பானது என்று சொல்லிவிட முடியாது, ஆனால் அவற்றில் சில மிக முக்கியமானவையாகவும் மற்றவைகளை விட மிகப்பாதுகாப்பானவையாகவும் இருக்கலாம்.
கர்ப்பிணிப் பெண்கள் எந்த விதமான போடாக்ஸ் சிகிச்சைகளையும் எடுத்துக்கொள்ளக்கூடாது. நீங்கள் போடாக்ஸ் எடுத்துக்கொள்ளும் போது நச்சுக்கள் உங்கள் இரத்த ஓட்டத்தில் செலுத்தப்படுவதே இதன் முக்கியக்காரணம், நீங்கள் குழந்தை பிறக்கும் வரை இதன் பக்கமே தலைவைத்துப்படுக்கக்கூடாது.
பறப்பது, குதிரை ஓட்டுதல் மற்றும் ஐஸ்ஸ்கேட்டிங் உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும், எனவே நீங்கள் அவற்றை கர்ப்ப காலத்தில் தவிர்க்கவேண்டும்.
கர்ப்பிணிப் பெண்கள் X-கதிர்கள், மெர்குரி, ஈயம், மற்றும் பூச்சிக்கொல்லிகளை தவிர்க்கவேண்டும் அல்லது அவற்றின் அருகில் இருக்கக்கூடாது. இவையனைத்தும் பிறவிக் குறைகள் மற்றும் கருச்சிதைவுகளை ஏற்படுத்தும், எனவே அவற்றிலிருந்து தள்ளியிருப்பதே சாலச்சிறந்தது.
புகைப்பிடித்தல் என்பது அனைவருக்குமே தீங்கிழைக்கும், ஆனால் இது குறிப்பாக கர்ப்பிணிப் பெண்களுக்கு மேலும் பிரச்சனை தருவதாக இருக்கும். ஏனெனில், இது குழந்தைகளுக்கு குழந்தையின் திடீர் மரண நோயின் கூட்டறிகள் (எஸ்ஐடிஎஸ்/SIDS), குறைப்பிரசவம், மற்றும் ஆஸ்த்மா போன்ற பயங்கரமான பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.
இதையும் படிக்கலாமே! - கர்ப்ப காலத்தில் மேல் முதுகு வலி
சுருக்கமாக, படியேறுதல் என்பது கர்ப்பிணிகளுக்கு உடற்பயிற்சி செய்வதற்கான சிறந்த வழியாக இருப்பது மட்டுமின்றி அவர்களது கெஸ்டேஷன் காலத்தில் ஷேப்பை மெயின்டெயின் செய்ய பக்கபலமாக இருந்து அவர்கள் ஆரோக்கியமான குழந்தையை பெற்றேடுக்கவும் உதவுகிறது.
Yes
No














Influenza and boostrix injection kisiko laga hai kya 8 month pregnancy me and q lagta hai ye plz reply me
Hai.... My last period was in feb 24. I tested in 40 th day morning 3:30 .. That is faint line .. I conculed mylo thz app also.... And I asked tha dr wait for 3 to 5 days ... Im also waiting ... Then I test today 4:15 test is sooooo faint ... And I feel in ma body no pregnancy symptoms. What can I do .
Baby kicks KB Marta hai Plz tell mi
PCOD kya hota hai
How to detect pcos
Your body needs extra nutrition this trimester - these can help.





This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

Mylo wins Forbes D2C Disruptor award

Mylo wins The Economic Times Promising Brands 2022
Baby Carrier | Baby Soap | Baby Wipes | Stretch Marks Cream | Baby Cream | Baby Shampoo | Baby Massage Oil | Baby Hair Oil | Stretch Marks Oil | Baby Body Wash | Baby Powder | Baby Lotion | Diaper Rash Cream | Newborn Diapers | Teether | Baby Kajal | Baby Diapers Pants | Cloth Diapers | Laundry Detergent | Lactation Granules |