This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
Track your pregnancy journey

கர்ப்ப காலத்தில் படபடப்பிற்கான அறிகுறிகள், காரணம் & சிகிச்சை | Palpitation in Pregnancy: Symptoms, Causes & Treatment in Tamil

Pregnancy Complications
Written by - Avira Paraiyarகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Nov 3, 2023
கர்ப்ப காலத்தில் படபடப்பிற்கான அறிகுறிகள், காரணம் & சிகிச்சை | Palpitation in Pregnancy: Symptoms, Causes & Treatment in Tamil
Likes4 Likes|
Read time8 min

கர்ப்ப காலத்தில் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் எண்ணற்ற மாற்றங்கள் ஏற்படுகின்றன! வயிறு பெரிதாக வளருவது போன்ற கண்ணுக்குத் தெரிந்த அறிகுறிகளுடன், உணருவதற்கு வாய்ப்பு குறைவான சில அறிகுறிகளும் ஏற்படக் கூடும். இதய படபடப்பு அதில் ஒன்றாகும். கர்ப்ப காலத்தில்இதய படபடப்பு ஏற்படுவது இயல்பானது தான், இதனால் ஆபத்து ஒன்றுமில்லை. கர்ப்ப காலத்தில் ஏற்படுகின்ற படபடப்பு குறித்து இந்தக் கட்டுரையில் மேலும் தெரிந்து கொள்ளலாம்.

கர்ப்ப காலத்தில் ஏற்படும் இதய படபடப்பு என்றால் என்ன? (What are heart palpitations in pregnancy in Tamil)

  • இதய படபடப்பு ஏற்படும் போது, உங்கள் இதயம் ஏதோ ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்பதைப் போன்று, பட பட என்று வேகமாகத் துடிப்பது போன்ற உணர்வு உண்டாகும். உங்கள் இதயத் துடிப்பின் வேகம் வழக்கத்தை விட அதிகரிக்கலாம் அல்லது குறையலாம். இதயம் துடிப்பதில் தாமதம் கூட ஏற்படலாம்.

  • கர்ப்ப காலத்தில் உங்கள் உடலின் இரத்த அளவு அதிகரிக்கிறது. உங்களுக்கும், உங்கள் குழந்தைக்கும் கூடுதலான இரத்தத்தை அனுப்பி வைக்கும் நோக்கத்தில், உங்கள் இதயம் வேகமாக வேலை செய்யும். இதன் காரணமாக படபடப்பு ஏற்படலாம்.

கர்ப்ப காலத்தில் இதய படபடப்பு ஏற்படுவது எந்த அளவுக்கு இயல்பானது? (How common are heart palpitations during pregnancy in Tamil)

  • கர்ப்ப காலத்தில் இதய படபடப்பு ஏற்படுவது இயல்பானது. கர்ப்ப காலத்தின் மூன்றாவது டிரைமெஸ்டரில் பெண்கள் நுழையும் போது, குழந்தையின் வளர்ச்சி அதிகமாக இருக்கும். அந்த சமயத்தில் குழந்தை ஆரோக்கியமாக வளருவதற்கு கூடுதலான இரத்தம் தேவைப்படும். இதன் காரணமாக படபடப்பு என்பது அடிக்கடி ஏற்படலாம்.

  • கர்ப்பம் அடைவதற்கு முன்பாகவே உங்களுக்கு அரித்மியா அல்லது வேறு ஏதேனும் இதயம் தொடர்பான பிரச்சனைகள் இருப்பின், அதன் காரணமாகவும் கர்ப்ப காலத்தில் படபடப்பு அறிகுறிகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கும். கர்ப்பமாக இருக்கும் போது இது அடிக்கடி நிகழக் கூடும்.

கர்ப்ப காலத்தில் படபடப்பு ஏற்படுவதற்கான அறிகுறிகள்

இதய படபடப்புக்கான அறிகுறிகள் இவை:

  • பதற்றம் (Fluttering)

உங்கள் நெஞ்சுப் பகுதியில் பதற்றம் அல்லது பரபரப்பு உண்டாகுவதை போலத் தோன்றும். உங்கள் இதயம் மிகவும் வேகமாக துடித்துக் கொண்டிருப்பதை போன்ற உணர்வு ஏற்படும்.

  • விடுபட்ட இதயத்துடிப்பு (Skipped heartbeat)

சீரற்ற இதயத்துடிப்பு ஏற்படும். மிக வேகமான துடிப்பு மற்றும் மிக மெதுவான துடிப்பு என மாறி, மாறி வருவது சீரற்ற துடிப்பிற்கான அறிகுறியாகும். கர்ப்ப காலத்தில் இதயம் துடிப்பதில் தாமதம் ஏற்படலாம்.

  • இரைச்சல் (Pounding)

உங்கள் இதயத்தில் இருந்து ஏதோ இரைச்சல் ஏற்படுவதைப் போல அல்லது அது கடினமாக வேலை செய்வதைப் போலத் தோன்றலாம். இதய படபடப்பு சிலருக்கு ஏற்படும்போது, அது தங்கள் காதுகளில் கேட்பதாக குறிப்பிடுகின்றனர்.

கர்ப்ப காலத்தில் இதய படப்படப்பு ஏற்படுவதற்கான காரணங்கள் (Causes of heart palpitations during pregnancy inTamil)

கர்ப்ப காலத்தில் உங்களுக்கு படபடப்பு வெவ்வேறு விஷயங்கள் காரணமாக ஏற்படலாம். அவை பின்வருமாறு:

  • இரத்தச்சோகை (சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை குறைவது)

  • மன அழுத்தம் மற்றும் கவலை

  • காஃபி

  • எலக்ட்ரோலைட்டுகளின் எண்ணிக்கை குறைவு மற்றும் நீர்ச்சத்து குறைபாடு

  • உடல் பருமன் மற்றும் மிகுதியான எடை

  • கர்ப்ப காலத்து ஹார்மோன் மாற்றங்கள்

  • இரத்த சர்க்கரை அளவு குறைபாடு

  • குறைவான இரத்த அழுத்தம்

இதய படபடப்பு ஏற்படுவதற்கு எப்போதாவது சில நோய்கள் காரணமாக அமையும். அவை:

  • இதய தாள பிரச்சனைகள் (அரித்மியாஸ்), ஏட்ரியல் குறு நடுக்கம்(Afib)

  • இதய தசைகளில் ஏற்படக் கூடிய மயோகார்டிடீஸ் என்னும் அழற்சி

  • ஹைப்பர்தைராய்டிஸம் போன்ற தைராய்டு பிரச்சனைகள்

  • வால்வு இயக்க கோளாறு போன்ற இதய அமைப்பு சார்ந்த பிரச்சனைகள்

இதையும் படிக்கலாமே! - ஹைப்பர் தைராய்டிசத்தின் அறிகுறிகள், தைராய்டு தலைகீழ் மாற்றத்திற்கான சிகிச்சை மற்றும் சிகிச்சை

கர்ப்ப காலத்தில் இதய படபடப்பு பிரச்சினையை கண்டறிதல் (Diagnosis for heart palpitations during pregnancy in Tamil)

கர்ப்ப காலத்தில் உங்கள் இதயத்துடிப்பு அறிகுறிகள் எப்படி இருக்கின்றன என்பதை விசாரித்து, உங்கள் இதயத்தை மருத்துவ நிபுணர் பரிசோதனை செய்வார். ஏதேனும் பிரச்சினைகள் இருக்கிறதா என்பதைக் கண்டறிய ரத்தப் பரிசோதனை செய்யக் கூடும் (முழுமையான இரத்த அணு எண்ணிக்கை அல்லது சிபிசி).

உங்கள் இதயத்துடிப்பை கணக்கீடு செய்ய எலக்ட்ரோகார்டியோகிராம் (இகேஜி or இசிஜி) பரிசோதனையை மருத்துவ நிபுணர் செய்யக் கூடும். உங்கள் சருமத்தில் இணைக்கப்படும் சென்சார்கள் மூலமாக உங்கள் இதயத்துடிப்பு வேகம் கண்டறியப்படும். கர்ப்ப காலத்தில் எந்தவித ஆபத்தும் இல்லாமல் இந்தப் பரிசோதனை செய்யப்படும். பெரும்பாலான சமயத்தில் இகேஜி பரிசோதனையின்போது இதய படபடப்பு விட்டுப் போகலாம். பரிசோதனை செய்யும்போது உங்கள் இதயத்துடிப்பு இயல்பானதாக தோன்றும். அது போன்ற சமயத்தில் ஹால்டர் திரையுடன் இணைக்கப்பட்ட எலக்ட்ரோகார்டியோகிராம் பரிசோதனைக்கு மருத்துவர் பரிந்துரை செய்வார்.

கர்ப்ப காலத்தில் ஏற்பட இதய படபடப்பை எதிர்கொள்ளுதல் மற்றும் சிகிச்சை

கர்ப்ப காலத்தில் ஏற்படுகின்ற படபடப்புக்கு பெரும்பாலும் சிகிச்சை தேவைப்படாது. ஏதேனும் இதய பாதிப்பு அல்லது இதயநோய் காரணமாக இல்லாமல், வெறுமனே படபடப்பு ஏற்படும் பட்சத்தில் உங்களின் உணவுப் பட்டியலில் மாற்றம் மற்றும் வாழ்வியல் மாற்றங்களை செய்யுமாறு மருத்துவர் அறிவுறுத்துவார். அந்தப் பரிந்துரைகள் பின்வருமாறு:

  • அதிக தண்ணீர் அருந்துவது (Increase Water Consumption)

கர்ப்ப காலத்தில் நீர்ச்சத்தை தக்க வைத்துக் கொள்வது மிக அவசியமாகும். ஏனென்றால், உங்களையும், கருவில் வளருகின்ற குழந்தையையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள அதிக திரவம் தேவைப்படும். கர்ப்ப காலத்தில் புகையிலை மற்றும் மது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். தாய்மார்களுக்கு மது அருந்துதல் மற்றும் புகைப்பிடித்தல் பழக்கங்கள் இருப்பின், அதன் காரணமாக குழந்தைக்கு படபடப்பு மற்றும் காயங்கள் ஏற்படலாம்.

  • காஃபி, சர்க்கரை மற்றும் கொழுப்பை குறைத்துக் கொள்வது (Limiting caffeine, sugar, and fat)

இந்தப் பொருட்கள் உங்கள் இதய படபடப்பை அதிகரிக்கக் கூடும். ஆகவே, தினசரி எடுத்துக் கொள்ளும் காஃபியை ஒரு கப் அளவுக்கு குறைத்துக் கொள்ள வேண்டும். அதே போல சாக்கலேட், இதர இனிப்புகள் அல்லது காஃபைன் சேர்க்கப்பட்ட உணவுகளை மிதமான அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். கொழுப்பு அல்லது சோடியம் நிறைந்த உணவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும்.

  • உடலை ரிலாக்ஸாக வைத்துக் கொள்ளுதல் (Practising Relaxing Techniques)

உங்களுக்கு இதய படபடப்பு ஏற்படுகிறது என்றால், உடலை அமைதியாக வைத்துக் கொள்வதற்கான பயிற்சிகளை மேற்கொள்ளலாம். மூக்கு மற்றும் வாய்வழியாக நீண்ட மற்றும் ஆழமான மூச்சுப்பயிற்சி செய்யலாம். அதேபோன்று தியானம் செய்வதும் பலனளிக்கும்.

உங்களுக்கு இதயநோய் இருக்கிறது அல்லது படபடப்பை உண்டாக்குகிற வேறு ஏதேனும் சிக்கல்கள் இருக்கிறது என்றால், உங்களுக்கும், உங்கள் குழந்தைக்குமான பாதுகாப்பான சிகிச்சை திட்டங்களை மருத்துவ நிபுணர் முடிவு செய்வார். காரணத்தை பொறுத்து சிகிச்சை முறை மாறுபடும்.

கர்ப்ப காலத்தில் இதய படபடப்பு ஏற்படுவதை தடுப்பது எப்படி? (How to prevent heart palpitations during pregnancy in Tamil)

கர்ப்ப காலத்தில் படபடப்பு ஏற்படுவதை முற்றிலுமாக தடுத்துவிட முடியாது. ஆனால், பின்வரும் நடவடிக்கைகளை பின்பற்றி அபாயங்களை கொஞ்சம் குறைக்கலாம்.

  • அதிக கொழுப்பு, மாவுச்சத்து, உப்பு அல்லது சர்க்கரை கொண்ட உணவுகளை குறைத்து, சீரான உணவுகளை எடுத்துக் கொள்ளவும்.

  • மன அழுத்தம் அல்லது கவலைகள் இருந்தால் அதற்கான உதவி கோரவும்.

  • மது அருந்துதல் மற்றும் புகைப்பிடித்தல் ஆகியவற்றை தவிர்க்கவும்.

  • காஃபைன் பொருட்களை குறைக்க வேண்டும்.

  • உடல் எடையை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது.

  • யோகா அல்லது தியானம் செய்யலாம். பதற்றத்தை குறைப்பதற்கு நீண்ட மூச்சுப்பயிற்சி மற்றும் இதர ரிலாக்ஸ் பயிற்சிகளை செய்யலாம்.

  • அவ்வப்போது மருத்துவரை அணுகி ஆலோசனைப் பெறலாம்.

இதையும் படிக்கலாமே! - கர்ப்பக்காலத்தில் உங்கள் மன ஆரோக்கியத்தை பராமரிப்பது எப்படி?

முடிவு செய்தல் (Conclusion)

கர்ப்ப காலத்தில் ஏற்படக் கூடிய படபடப்பு நமக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், அது அபாயகரமானது கிடையாது. இருப்பினும், இதன் அறிகுறிகளை முற்றிலுமாக புறந்தள்ளி விடக் கூடாது. ஆகவே, உங்கள் மருத்துவரிடம் ஆலோசனைப் பெறவும். சில சிகிச்சைகள் உங்களுக்கும், உங்கள் குழந்தைக்கும் பயனுள்ளதாக அமையும். குழந்தை வளர்ப்பு, குழந்தை பராமரிப்பு மற்றும் முதியோர் பராமரிப்பு போன்ற விஷயங்களை தெரிந்து கொள்ள மைலோ ஃபேமிலி இணையதளத்தை பார்வையிடவும்.

References

1. Adamson, D. L., & Nelson-Piercy, C. (2008). Managing palpitations and arrhythmias during pregnancy. Postgraduate Medical Journal,

2. Choi, H. S., Han, S. S., Choi, H. A., Kim, H. S., Lee, C. G., Kim, Y. Y., Hwang, J. J., Park, J. B., & Shin, H. H. (2001). Dyspnea and Palpitation during Pregnancy. The Korean Journal of Internal Medicine

Tags

What are heart palpitation during pregnancy in Tamil, How common are heart palpitations during pregnancy in Tamil, How to prevent heart palpitations during pregnancy in Tamil, Palpitation in Pregnancy: Symptoms, Causes & Treatment in English, Palpitation in Pregnancy: Symptoms, Causes & Treatment in Hindi, Palpitation in Pregnancy: Symptoms, Causes & Treatment in Telugu, Palpitation in Pregnancy: Symptoms, Causes & Treatment in Bengali

Is this helpful?

thumbs_upYes

thumb_downNo

Your parenting partner
in your pocket.

Access 24/7 expert tools, trackers, and a
supportive community.
Mylo App Banner

Your parenting partner
in your pocket.

Access 24/7 expert tools, trackers, and a
supportive community.
Apple App StoreGoogle Play Store
Apple App StoreGoogle Play Store

Article Posted Under

Helpful Tools & Calculators

undefined icon
Pregnancy Calendar
See baby growth week by week
arrow_right
undefined icon
Mylo Store
Shop for mom & baby
arrow_right
undefined icon
Pregnancy Diet Chart
Trimester & region-wise diet plan
arrow_right
undefined icon
Mamasutra
Safe positions for pregnancy
arrow_right
undefined icon
Save Memories
Store baby's photos & firsts
arrow_right
undefined icon
Weight Tracker
Monitor your weight
arrow_right
undefined icon
Zordar Dadi Ke Nuskhe
Gharelu nushke that work
arrow_right
undefined icon
My Calendar
Predict periods & record symptoms
arrow_right
undefined icon
Ovulation Calendar
Know your monthly cycle
arrow_right
undefined icon
Pill Reminder
Get reminded for medicines
arrow_right
undefined icon
Vaccination Tracker
Never miss a vaccine date
arrow_right
undefined icon
Make Baby Sleep
Play white noise & sleep music
arrow_right
undefined icon
Pregnancy Music
Play calming music for baby
arrow_right
undefined icon
Baby Diet Chart
Age-wise food plans for baby
arrow_right
Avira Paraiyar
Avira Paraiyar

Related Articles

Questions about this article

  • Asked when 33 weeks pregnant

    Influenza and boostrix injection kisiko laga hai kya 8 month pregnancy me and q lagta hai ye plz reply me

  • Asked when 7 weeks pregnant

    Hai.... My last period was in feb 24. I tested in 40 th day morning 3:30 .. That is faint line .. I conculed mylo thz app also.... And I asked tha dr wait for 3 to 5 days ... Im also waiting ... Then I test today 4:15 test is sooooo faint ... And I feel in ma body no pregnancy symptoms. What can I do .

  • 26 weeks pregnant

    Baby kicks KB Marta hai Plz tell mi

  • trying to conceive

    PCOD kya hota hai

  • Asked when trying to conceive

    How to detect pcos

Related Topics

Recently Published Articles

Your body needs extra nutrition this trimester - these can help.

Medical Disclaimer

This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

foot top wavefoot down wave

AWARDS AND RECOGNITION

Awards

Mylo wins Forbes D2C Disruptor award

Awards

Mylo wins The Economic Times Promising Brands 2022

AS SEEN IN

Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on TOI
Mylo featured on inc42
Mylo featured on Business Standard
Mylo featured on YourStory
Mylo featured on ANI
Mylo Logo

Start Exploring

wavewave
About Us
Mylo_logo
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
  • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
  • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
  • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.