
இன்றைய தலைமுறையினர் பலர் நுங்கு பற்றி பெரிதாக தெரிந்து கொள்ளாமல் இருக்கலாம். இந்த நுங்கு, வெயில் காலத்தில் அதிக அளவில் பரிந்துரைக்கப்படுகிறது. மேலும் கர்ப்பிணி பெண்களுக்கு குறிப்பாக பரிந்துரை செய்யப்படுகிறது. ஆனால் கர்ப்ப காலத்தில் நுங்கு சாப்பிடுவது பாதுகாப்பானதா? இந்த கோடைக்கால பழத்தை கர்ப்பிணி பெண்கள் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் அபாயங்கள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
நொங்கு என்றும் அழைக்கப்படும் நுங்கு என்பது தென்கிழக்கு ஆசிய பகுதி மற்றும் தென்னிந்தியாவில் பெரும்பாலும் காணப்படுகிறது. தமிழகத்தில் தெருவிற்கு தெரு நுங்கு விற்பனை செய்வதை உங்களால் பார்க்க முடியும். பொராசஸ் ஃபிளாபெல்லிஃபெர் என்ற பனை மரத்தில் கொத்து கொத்தாக காய்த்து தொங்கும் பழங்கள் இவை. முற்றிய பனம் பழமானது தேங்காய் அளவில் இருக்கும். அதோடு கருப்பு நிற வெளிப்புற ஓட்டினைக் கொண்டிருக்கும். இது நிறமற்றது. மேலும் பார்ப்பதற்கு ஜெல்லி போல இருப்பதாலேயே இந்த பெயரைப் பெற்றது. நுங்கிற்குள் இனிப்பு சுவை கொண்ட ஒரு திரவம் இருக்கும். இது தேங்காய் நீர் போலவே புத்துணர்ச்சியூட்டக்கூடியது. இதன் காரணமாக கர்ப்ப காலத்தில் நுங்கு சாப்பிடுவது ஊக்குவிக்கப்படுகிறது.
நுங்கு அதன் ஆரோக்கிய நலன்களுக்கு பெயர் பெற்றது. இது செரிமான பிரச்சினைகளுக்கு ஏற்றது மற்றும் குடல் இயக்கத்தை சீராக்கும். நுங்கில் உள்ள அதிக நீர்ச்சத்து காரணமாக இது கோடை காலத்தில் பிரபலமடைகிறது. இதில் குறைவான கலோரிகளே உள்ளன. நுங்கில் கால்சியம் மற்றும் பைட்டோ நியூட்ரியண்டுகள் நிறைந்துள்ளது. சருமம் மற்றும் தலைமுடிக்கு அவசியமான வைட்டமின்கள் ஏ, இ, மற்றும் பி7 ஆகியவை நுங்கில் உள்ளது. வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி போன்றவற்றை அனுபவிக்கும் நபர்கள் நீர்ச்சத்து இழப்பைத் தவிர்க்க நுங்கை மிதமான அளவில் சாப்பிட வேண்டும். மேலும், கர்ப்ப காலத்தில் உண்டாகும் சோர்வைத் தவிர்க்க கர்ப்ப காலத்தில் நுங்கு சாப்பிடுவது வழக்கமாக கொள்ளப்படுகிறது.
இப்போது கர்ப்ப காலத்தில் நுங்கு சாப்பிடுவது பாதுகாப்பானதா என்பது குறித்து பார்க்கலாம். நுங்கு இயற்கையாக வளர்க்கப்படும் ஒரு பழம் என்பதாலும், அது ஆற்றல், ஃபோலேட், மற்றும் வைட்டமின்கள் போன்றவற்றின் ஆதாரமாக இருப்பதாலும் கர்ப்ப காலத்தில் நுங்கு சாப்பிடுவது பாதுகாப்பானது தான். குறிப்பாக கர்ப்ப காலத்தில் ஒரு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது நல்லது. நுங்கு வாங்கும் முன், அதன் மீது இரசாயனங்கள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை என்பதை உறுதி செய்து கொள்ளவும். நுங்கு விரைவில் கெட்டுவிடக்கூடும் என்பதால் கடைகள் அல்லது ரோட்டோரங்களில் நீங்கள் வாங்கும் நுங்கு ஃபிரஷாக உள்ளதா என்பதை கவனிக்கவும். எனினும், உங்கள் கர்ப்ப கால டையட்டில் எந்த ஒரு உணவையும் சேர்க்கும் முன் ஒரு நல்ல மகப்பேறு நிபுணரை சந்திப்பது நல்லது.
கர்ப்ப காலத்திற்கு காலை வேளை ஒரு மோசமான நேரம் ஆகும். வாந்தி எடுப்பதற்கு மீண்டும் மீண்டும் கழிப்பறைக்கு ஓடியதை நிச்சயமாக மறக்க முடியாது. விடாமல் மீண்டும் மீண்டும் வாந்தி எடுப்பது உங்களை சோர்வடையச் செய்வது மட்டும் இல்லாமல், இதன் காரணமாக உங்களுக்கு அசிடிட்டி பிரச்சினையும் ஏற்படும். கர்ப்ப காலத்தில் நுங்கு சாப்பிடுவது இது போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவும். இந்த ஊட்டச்சத்து நிறைந்த, குறைந்த கலோரி பழத்தை மிதமான அளவில் சாப்பிடுவது கர்ப்பிணி பெண்கள் அனுபவிக்கும் உணவுகளுக்கான ஏக்கத்தை சமாளிக்க உதவுகிறது. நுங்கு தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிப்பதோடு அதன் ஊட்டச்சத்து மதிப்பையும் அதிகரிக்கச் செய்கிறது. இந்த தாய்ப்பாலை பருகும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிக அளவில் இருக்கும்.
கர்ப்ப காலத்தில் நுங்கு சாப்பிடுவதால் எந்த ஒரு பிரச்சினையும் இல்லை; அதற்கு மாறாக, கர்ப்ப காலத்தில் நுங்கு சாப்பிட்டால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். எனினும், இந்த பழத்தில் அதிக குளுக்கோஸ் இருப்பதால் இதனை மிதமான அளவில் சாப்பிட வேண்டும். கர்ப்ப காலத்தில் நுங்கு சாப்பிடுவதற்கு முன் உங்கள் மருத்துவரை அணுகவும். செரிமான பிரச்சினைகள் மற்றும் வயிறு வலி ஏற்படுவதைத் தடுக்க நன்கு முற்றிய மற்றும் பழுத்த பழங்களை பார்த்து வாங்கவும்.
இதையும் படிக்கலாமே! - கர்ப்ப காலத்தில் பன்னீர் நல்லதா? இதன் நன்மைகள், பக்க விளைவுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
ஃபிரஷான நுங்கு வாங்கிய சிறிது நேரத்திலேயே சாப்பிட்டு விட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும். வெறுமனே அதன் சதையை வெட்டி, அதிலுள்ள நீருடன் ஒரு கிண்ணத்தில் சேர்த்து அப்படியே சாப்பிடலாம். அதுவே பாரம்பரிய முறையில் சாப்பிட வேண்டும் என்றால் உங்கள் கைகளால் நுங்கின் தோலுரித்து உங்கள் விரலைக் கொண்டு அதில் ஒரு துளையிட்டு அதிலுள்ள நீரை முதலில் பருகவும். பின்னர் அதன் சதைப் பகுதியை நன்கு மென்று சாப்பிடவும். காரசாரமாக பிடிக்கும் என்பவர்கள் அதன் மீது லேசாக மிளகாய் தூள் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு தூவி சாப்பிடலாம். ஒரு சில கர்ப்பிணி பெண்களுக்கு இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற ஏக்கம் இருக்கும். இது போன்ற நேரத்தில் நுங்கு பாயாசம் அல்லது நுங்கு மில்க்ஷேக் செய்து சாப்பிடலாம்.
நுங்கு விரைவில் கெட்டுவிடும் என்பதால், அதனை எப்போதும் குளிர் சாதன பெட்டியில் சேமித்து வைக்கவும். பழத்தில் உள்ள தோலை உரித்து ஒரு பாத்திரத்தில் போட்டு இறுக்கமாக மூடி வைக்கவும். இவ்வாறு செய்யாவிட்டால் ஆக்சிஜனேற்றம் காரணமாக நுங்கின் சுவையும், நிறமும் மாறிவிடும். எப்போதும் ஃபிரஷான நுங்கை மட்டுமே வாங்கவும். நுங்கின் தோல் சுருங்கி இருந்தால் அது பழையது என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம். அது வெகு நேரத்திற்கு முன்பு வெட்டப்பட்ட நுங்கு என்றால், நீர்ச்சத்து இழந்த சுருங்கிய தோலை நீங்கள் காணலாம்.
References
1. Sundram K, Sambanthamurthi R, Tan YA. (2003). Palm fruit chemistry and nutrition. Asia Pac J Clin Nutr
Nungu during pregnancy in Tamil, Benefits of nungu during pregnancy in Tamil, Uses of nungu during pregnancy in Tamil, Ice Apple During Pregnancy: Benefits And Risks in English, Ice Apple During Pregnancy: Benefits & Risks in Hindi, Ice Apple During Pregnancy: Benefits & Risks in Tamil, Ice Apple During Pregnancy: Benefits & Risks in Telugu, Ice Apple During Pregnancy: Benefits And Risks in Bengali
Yes
No














Influenza and boostrix injection kisiko laga hai kya 8 month pregnancy me and q lagta hai ye plz reply me
Hai.... My last period was in feb 24. I tested in 40 th day morning 3:30 .. That is faint line .. I conculed mylo thz app also.... And I asked tha dr wait for 3 to 5 days ... Im also waiting ... Then I test today 4:15 test is sooooo faint ... And I feel in ma body no pregnancy symptoms. What can I do .
Baby kicks KB Marta hai Plz tell mi
PCOD kya hota hai
How to detect pcos
Your body needs extra nutrition this trimester - these can help.





This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

Mylo wins Forbes D2C Disruptor award

Mylo wins The Economic Times Promising Brands 2022
Baby Carrier | Baby Soap | Baby Wipes | Stretch Marks Cream | Baby Cream | Baby Shampoo | Baby Massage Oil | Baby Hair Oil | Stretch Marks Oil | Baby Body Wash | Baby Powder | Baby Lotion | Diaper Rash Cream | Newborn Diapers | Teether | Baby Kajal | Baby Diapers Pants | Cloth Diapers | Laundry Detergent | Lactation Granules |