


Diet & Nutrition
3 November 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது
ஒரு கர்ப்பிணிப் பெண்ணாக, உங்கள் ஊட்டச்சத்து மற்றும் உணவில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம் - பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்வதை விட, இதை செய்ய சிறந்த வழி வேறு ஏதாவது இருக்க முடியுமா? ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகள் கர்ப்ப காலத்தில் உடல் நலத்தைப் பேணுவதில் பக்க பலமாக உள்ளன. அத்தகைய பழங்களில் ஒன்று தான் தர்பூசணி.
கர்ப்ப காலத்தில் தர்பூசணி சாப்பிடலாமா என்று நீங்கள் யோசித்துக் கொண்டிருந்தாள், அதற்கு பதில் ஆம் என்பது தான். கர்ப்ப காலத்தில் குறிப்பாக கர்ப்பத்தின் முதல் டிரைமெஸ்டரில், தர்பூசணி சாப்பிடுவதால் பல நன்மைகள் ஏற்படும்.
தர்பூசணிகளில் நிறைய வைட்டமின்கள் உள்ளன - இதில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, வைட்டமின் பி6, மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் ஆகியவை அடங்கும். இவை அனைத்தும் கர்ப்பிணிப் பெண்களுக்கு பெரிதும் உதவுகின்றன - தசைப்பிடிப்பை எதிர்த்துப் போராடுவது முதல் தசைகள் ஓய்வெடுக்க அனுமதிப்பது மற்றும் முன்கூட்டிய சுருக்கங்கள் ஏற்படும் அபாயத்தைத் தவிர்ப்பது வரை, தர்பூசணிகள் கர்ப்பிணிகளுக்கு மசக்கை, அமிலத்தன்மை மற்றும் நெஞ்செரிச்சல் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க உதவும், மேலும் நீரிழப்பு உணர்வையும் தடுக்க உதவும். கர்ப்ப காலத்தில் தர்பூசணி சாப்பிட வேண்டும் என்று ஆசையாக உள்ளதா? அது நல்ல விஷயம் தான்! கர்ப்ப காலத்தில் தர்பூசணி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி விவரமாகப் பார்ப்போம்.
தர்பூசணியில் கார்போஹைட்ரேட்டுகள், தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுகளின் ஆரோக்கியமான கர்ப்பத்திற்குத் தேவையான தாவரக் கலவைகள் அனைத்தும் உள்ளன. தர்பூசணிகளில் 91% நீர் உள்ளடக்கம் உள்ளது, எனவே இது கர்ப்பிணிப் பெண்களை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது மற்றும் குமட்டலை எதிர்த்துப் போராட உதவுகிறது. கர்ப்பிணிப் பெண்கள் குறிப்பிட்ட இடைவெளியில், தினசரி ஓரிரண்டு துண்டுகள் சாப்பிடுவது, அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
லைகோபீன் மற்றும் லுடீன் நிறைந்த தர்பூசணி ஆன்டிஆக்ஸிடன்ட்களின் சிறந்த மூலமாகும், இது உடலில் தொற்று மற்றும் நோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் குறைப்பிரசவம் உட்பட கர்ப்பத்தின் காரணமாக ஏற்படக்கூடிய சிக்கல்களின் அபாயத்தைத் தணிக்க உதவுகின்றன. அவற்றில் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் பி6 உள்ளன - இவை அனைத்தும் கண், மூளை மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு பங்களிக்கின்றன. நிபுணர்களின் கூற்றுப்படி, தர்பூசணிகளின் நுகர்வு ப்ரீ-எக்லாம்ப்சியாவின் அபாயத்தைக் குறைக்கவும் உதவும்.
கர்ப்ப காலத்தில் தர்பூசணி சாப்பிடுவதால் பல நன்மைகள் உள்ளன. அவை இதோ:
தர்பூசணிகளில் அதிக நீர்ச்சத்து இருப்பதால் எடிமாவைத் தடுக்கும்.
மசக்கையை தடுக்க உதவும் ஆற்றலைத் தருகிறது.
நீரிழப்பைத் தடுக்கிறது.
தசைப்பிடிப்பை எளிதாக்குகிறது.
தோல் நிறமியைத் தடுக்கிறது மற்றும் உடலை சுத்தப்படுத்துகிறது.
கர்ப்பிணி மற்றும் வளரும் கரு ஆகிய இருவருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது.
மலச்சிக்கல், மோசமான குடல் இயக்கம் மற்றும் வயிற்றுப்போக்குக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது.
சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்கிறது, எனவே வறண்ட சரும பிரச்சனைகளைத் தவிர்க்க உதவுகிறது.
சிறுநீர் பாதையில் ஏற்படும் தொற்றுகளை குணப்படுத்த உதவுகிறது.
பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் உள்ளன.
கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
கரு நன்றாக வளர அனுமதிக்கிறது.
அமிலத்தன்மை மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற செரிமான பிரச்சனைகளை சீராக்குகிறது.
பாதகமான விளைவுகள் அல்லது கர்ப்பப் பிரச்சினைகளின் வாய்ப்பைக் குறைக்கலாம்
தர்பூசணியில் நிறைய நீர்ச்சத்து உள்ளது, மேலும் கர்ப்பிணிப் பெண்களுக்கு வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் அல்லது மூல நோய் போன்ற பிரச்சனைகளைக் குறைக்க உதவுகிறது. தர்பூசணிகளை தவறாமல் சாப்பிடுவது கர்ப்ப காலத்தில் ஏற்படக்கூடிய சிக்கல்களைத் தவிர்ப்பதற்கும் சிறந்தது.
இதையும் படிக்கலாமே! - கர்ப்ப காலத்தில் கருப்பு திராட்சை; நன்மைகள் மற்றும் அதை தவிர்க்க வேண்டிய தருணங்கள்
தர்பூசணியை சாப்பிட பல வழிகள் உள்ளன தெரியுமா? அதை வெட்டி ஒரு பழமாக சாப்பிடுவதைத் தவிர, நீங்கள் தர்பூசணி சாறு மற்றும் லெமனேட் தயார் செய்யலாம், சாலட் அல்லது சல்சாவில் சாப்பிடலாம் அல்லது பாப்சிகல்ஸ் செய்யலாம்!
பொதுவாக, கர்ப்ப காலத்தில் தர்பூசணி சாப்பிடுவது பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. இருப்பினும், தர்பூசணிகளில் நார்ச்சத்து குறைவாக இருப்பதால், அவை உடலின் சர்க்கரை அளவை அதிகரிக்க வழிவகுக்கும் - எனவே அதிக சர்க்கரையால் உங்களுக்கு சிக்கல்கள் இருந்தால், தர்பூசணி உட்கொள்ளலைக் குறைக்க வேண்டும். தர்பூசணிகளை உட்கொள்வதற்கு முன்பு கழுவி சரியாக வெட்டப்பட்டிருப்பதை உறுதி செய்வதும் முக்கியம். தர்பூசணி சாப்பிடுவதற்கு முன் சரியாக குளிரூட்டப்பட்டதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
தர்பூசணியில் அதிக நீர்ச்சத்து இருப்பதால் உடலுக்கு குளிர்ச்சி தரும். இது உடலில் இருந்து நச்சுகளை அகற்றவும் உதவுகிறது.
தர்பூசணிகளை உட்கொள்வதால் உடலுக்கு அதிகப்படியான திரவங்கள் மற்றும் வைட்டமின்கள் கிடைக்கும். தர்பூசணிகளில் லைகோபீன் எனப்படும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருப்பதாக அறியப்படுகிறது, இது நோய்களைத் தடுக்க உதவுகிறது மற்றும் தொற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. இது சுவாச இன்ஃப்ளமேஷனின் ஆபத்தை குறைக்க உதவுகிறது.
கர்ப்ப காலத்தில் தர்பூசணிகள் பொதுவாக பாதுகாப்பானவை மற்றும் தர்பூசணி சாப்பிடுவதால் கருச்சிதைவு ஏற்படாது.
Yes
No

Written by
Avira Paraiyar
Get baby's diet chart, and growth tips











கர்ப்ப காலத்தில் ஈகோஸ்பிரின் மாத்திரையை எடுத்துக் கொள்வதால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா?| Are There Any Side Effects Of Taking Ecosprin In Pregnancy in Tamil

ஐ.யூ.ஐ (IUI) (கருப்பைக்குள் விந்தணுவைச் செலுத்துதல்) என்பது வலி நிறைந்ததாக இருக்குமா? | Is IUI (Intra Uterine Insemination) Painful in Tamil

பச்சிளங் குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல் மற்றும் சளிக்கான 10 வீட்டு வைத்தியங்கள்-10 Home Remedies For Cough And Cold In Toddlers in Tamil

அண்டவிடுப்பின் காலம் - மிகவும் வளமான சாளரம், கர்ப்பத்திற்கான தடையைத் திறக்கவும் |Ovulation Period-The Most Fertile Window, Open the Roadblock to Pregnancy in Tamil

பாலியல் உறவுக்குப் பிறகு கர்ப்பம் அடைவதை இயற்கையாக தவிர்ப்பது எப்படி| How To Avoid Pregnancy Naturally After Sex in Tamil

தந்தைவழி விடுப்பு: விதிகள், உரிமைகள் மற்றும் நன்மைகளுக்கான வழிகாட்டி (Paternity Leave: The Ultimate Guide to Rules, Rights and Benefits In Tamil)