hamburgerIcon

Orders

login

Profile

STORE
SkinHairFertilityBabyDiapersMore
Tackle the chill with hot discounts🔥 Use code: FIRST10Tackle the chill with hot discounts🔥 Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
  • Home arrow
  • Diet & Nutrition arrow
  • கர்ப்ப காலத்தில் சூரியகாந்தி விதைகள் சாப்பிடுவது | தொடர்புடைய நன்மைகள், அபாயங்கள் மற்றும் செய்முறை விளக்கங்கள்(Eating Sunflower Seed in Pregnancy | Advantages, Risks, & Recipes In Tamil) arrow

In this Article

    கர்ப்ப காலத்தில் சூரியகாந்தி விதைகள் சாப்பிடுவது | தொடர்புடைய நன்மைகள், அபாயங்கள் மற்றும் செய்முறை விளக்கங்கள்(Eating Sunflower Seed in Pregnancy | Advantages, Risks, & Recipes In Tamil)

    Diet & Nutrition

    கர்ப்ப காலத்தில் சூரியகாந்தி விதைகள் சாப்பிடுவது | தொடர்புடைய நன்மைகள், அபாயங்கள் மற்றும் செய்முறை விளக்கங்கள்(Eating Sunflower Seed in Pregnancy | Advantages, Risks, & Recipes In Tamil)

    3 November 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது

    உலகம் முழுக்க, தற்போது சூரியகாந்தி விதைகள் ஒரு சுவையான மற்றும் விரும்பப்படும் ஒரு ஸ்நாக் ஆக பிரபலம் அடைந்து கொண்டு வருகிறது. ஆனால், கர்ப்ப காலத்தில் சூரியகாந்தி விதைகள் சாப்பிடுவது பாதுகாப்பானதா? இதற்கான பதில் பெரும்பாலும் தாயின் ஆரோக்கியம், மற்றும் கர்ப்ப காலத்தில் சூரியகாந்தி விதைகளின் சாத்தியமான நன்மைகள், ஆபத்துக்கள் மற்றும் நோக்கம் பொறுத்து அமையும். ஆனால், பொதுவாக சொல்ல வேண்டுமெனில், கர்ப்ப காலத்தில் சூரியகாந்தி விதைகள் சாப்பிடுவது ஒரு நல்ல யோசனை தான்.

    சூரியகாந்தி விதைகள் என்றால் என்ன?(What are Sunflower Seeds?In Tamil)

    சூரியகாந்தி மலரில் உள்ள விதைகள் தான் சூரியகாந்தி விதைகள். பொதுவாக காணப்படும் சூரியகாந்தி விதைகளின் வகைகள் பின்வருமாறு,

    • லினோலியிக்.

    • ஹை ஒலீயிக்.

    • சூரியகாந்தி எண்ணெய் விதைகள்.

    கொழுப்பு உள்ளடக்கத்தின் வகையைப் பொறுத்து சூரியகாந்தி விதைகள் வகைப்படுத்தப்படுகின்றன. கொழுப்பின் மூன்று துணை வகைகள் பின்வருமாறு:

    • மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள்.

    • சாச்சுரேட்டட் கொழுப்புகள்

    • பாலிசாச்சுரேட்டட் கொழுப்புகள்.

    கர்ப்ப காலத்தில் சூரியகாந்தி விதைகள் நல்லதா?(Are Sunflower Seeds Good for Pregnancy?In Tamil)

    கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் மற்றும் தங்களின் வயிற்றில் உள்ள குழந்தையின் ஆரோக்கியத்திற்கும் சேர்த்து சாப்பிட வேண்டும் என்பதால், உணவு முறைகள் குறித்து சற்று கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கர்ப்ப காலத்தில் சூரியகாந்தி விதைகள் ஃபோலிக் அமிலத்தின் சிறந்த மூலாதாரமாக விளங்குகிறது. இது ஆரோக்கியமான கர்ப்ப காலத்திற்கு மிகவும் அவசியமாகும். இது போன்ற விதைகள் மற்றும் பாதாம், முந்திரி போன்ற பருப்பு வகைகளில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால், அவை செரிமானத்திற்கும் உதவியாக இருக்கும். மேலும், இதில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளதால், இவை குழந்தையின் மூளை வளர்ச்சி மற்றும் நரம்பு மண்டலத்தின் ஆரம்ப கால வளர்ச்சிக்கும் உதவுகிறது.

    Nutritional Values of Sunflower Seed சூரியகாந்தி விதைகளின் ஊட்டச்சத்து மதிப்பு(Nutritional Values of Sunflower Seed In Tamil)

    • கார்போஹைட்ரேட்ஸ் (Carbohydrates)

    கால் கப் சூரியகாந்தி விதைகளில் 7 கிராம் கார்போஹைட்ரேட்ஸ் மற்றும் 207 கலோரி உள்ளது. இது குறைந்த கிளைசெமிக் உணவாகவும் உள்ளது, ஏனெனில் இதில் சிறிதளவு அல்லது சர்க்கரையே இருக்காது.

    • கொழுப்புக்கள்(Fats)

    கால் கப் விதைகளில் கிட்டத்தட்ட 19 கிராம் கொழுப்பு உள்ளது. ஆனால், இதில் பெரும்பாலான பங்கு ஆரோக்கியமான கொழுப்பு.

    • புரதங்கள்(Proteins)

    கால் கப் விதைகளில் சுமார் 6 கிராம் புரதம் உள்ளது.

    • மினரல்கள்(Minerals)

    தாமிரம் (பரிந்துரைக்கப்பட்ட தினசரி அளவில் 68%), மெக்னீசியம் (10%), பாஸ்பரஸ் (31%), மாங்கனீஸ் (31%), செலினியம் (35%), மற்றும் குறைந்த அளவு துத்தநாகம், இரும்புச் சத்து மற்றும் பொட்டாசியம் ஆகிய மினரல்கள் இதில் உள்ளன.

    • வைட்டமின்கள்(Vitamins)

    சூரியகாந்தி விதைகள் 7.4 மில்லி கிராம் அல்லது எஃப்டிஏ வழங்கிய பரிந்துரைக்கப்பட்ட தினசரி உட்கொள்ளலில் 50%-க்கும் குறைவாக வழங்குகிறது, எனவே இவை வைட்டமின் ஈ-ன் சிறந்த மூலமாகும்.

    கர்ப்ப காலத்தில் சூரியகாந்தி விதைகளை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்(Benefits of Sunflower Seeds in Pregnancy In Tamil)

    இப்பொழுதெல்லாம் கர்ப்ப காலத்தில் சூரியகாந்தி விதைகளை உட்கொள்வது அவசியம் என்றும் சொல்லலாம். அவற்றின் முக்கியமான நன்மைகள் பின்வருமாறு -

    1. இதில் மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன.

    1. உடலில் ஏற்படும் ரேடிக்கல் மாற்றங்களை இது தடுக்கிறது.

    1. சூரியகாந்தி விதைகள் நரம்புகளில் இரத்தம் உறைவதைக் குறைத்து தடுக்கிறது.

    1. இரத்த அழுத்தத்தை மிதமாக்கிறது.

    1. நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.

    1. எலும்பு வலிமையை மேம்படுத்தும் வகையில் இதில் பாஸ்பரஸ் உள்ளது.

    1. இதய நோய்கள் ஏற்படாமல் பாதுகாக்கிறது.

    இதையும் படிக்கலாமே! - கர்ப்ப காலத்தில் சியா விதைகள் பாதுகாப்பானதா?

    கர்ப்ப காலத்தில் சூரியகாந்தி விதைகள் சாப்பிடுவதால் ஏற்படும் அபாயங்கள்(What are the Risks of Eating Sunflower Seeds During Pregnancy?In Tamil)

    கர்ப்ப காலத்தில் சூரியகாந்தி விதைகளை சாப்பிடுவதால் ஏற்படக் கூடிய பாதகமான விளைவுகள் இதோ -

    • ஒவ்வாமை(Allergies):

    பெரும்பாலானவர்களுக்கு சூரியகாந்தி விதை சாப்பிட்டால் ஒவ்வாமை ஏற்படும். சூரியகாந்தியை அறுவடை செய்யும் போது, அதில் தூசி படிந்து சூரியகாந்தி விதைகள் அல்லது பறவை உணவுகள் கொண்ட சூரியகாந்தி விதைகள் இருக்கலாம். சிலருக்கு, இது ஒவ்வாமை எதிர்வினைகளை ஏற்படுத்தக் கூடும்.

    • பாக்டீரியா(Bacteria):

    மளிகைக் கடைகளில் இருந்து வாங்கப்படும் சூரியகாந்தி விதைகள் ஃபுட் பாய்சனிங் ஏற்படுவதற்கு வழிவகுக்கும் ஆபத்தான நோய்க்கிருமிகளைக் கொண்டிருக்கலாம்.

    • அதிக கலோரி(Calorie-dense):

    சூரியகாந்தி விதைகள் சீரான உணவு முறையில் சேர்க்கப்படும் போது பல உடல் நல நன்மைகளைக் கொடுக்கும். ஆனால், இதில் அதிக கலோரிகள் உள்ளதால் அளவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

    இதையும் படிக்கலாமே! - கர்ப்ப காலத்தில் தாமரை விதைகள்: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்

    கர்ப்ப காலத்தில் சூரியகாந்தி விதைகளை எவ்வாறு எடுத்துக் கொள்ள வேண்டும்?(How Should Sunflower Seeds in Pregnancy Be Eaten?In Tamil)

    கர்ப்ப காலத்தில் சூரியகாந்தி விதைகள் சாப்பிடுவது நல்லது தான். இதனை உங்கள் டயட்டில் பின்வரும் வகைகளில் சேர்த்துக் கொள்ளலாம் -

    • நீரிழந்த அல்லது ஈரமான சூரியகாந்தி விதைகளை சமைக்கும் போது பயன்படுத்தலாம்.

    • சூரியகாந்தி விதைகளை மற்ற பழங்கள் மற்றும் உலர் பழங்களுடன் சேர்த்து காலை உணவாக அல்லது மாலை சிற்றுண்டியாக சாப்பிடலாம்.

    • சூரியகாந்தி விதைகளை அப்படியே சாப்பிடலாம் அல்லது வறுத்து சாப்பிடலாம்.

    • மஃபின் அல்லது பிரட் போன்றவற்றில் சூரியகாந்தி விதைகளை நிரப்பி சாப்பிடலாம்.

    ஒரு கர்ப்பிணிப் பெண் எவ்வளவு சூரியகாந்தி விதைகளை எடுத்துக் கொள்ளலாம்?(How Much Sunflower Seed Should be Consumed When Pregnant?In Tamil)

    ஒருவர் தினசரி ஒரு டேபிள் ஸ்பூன் சூரியகாந்தி விதைகளை அப்படியே அல்லது வறுத்து சாப்பிடலாம். அல்லது ஒரு டேபிள் ஸ்பூன் சூரியகாந்தி விதைகளை சமயலில் சேர்த்துக் கொள்ளலாம். அதற்கு பதில் சூரியகாந்தி வெண்ணெய் கூட பயன்படுத்தலாம். கர்ப்ப காலத்தில் சூரியகாந்தி விதைகள் கொண்டு ஆரோக்கியமான டிரிங் தயார் செய்து குடிக்கலாம்.

    கர்ப்ப காலத்தில் சூரியகாந்தி விதைகளை வைத்து செய்யக்கூடிய உணவுகள்(Sunflower Seeds Pregnancy Recipes In Tamil)

    கிரானோலா பார் (Granola Bar)

    • ஒரு பேக்கிங் டிஷ்ஷை பிரஷ் கொண்டு உருகிய வெண்ணெய் தடவி சூடுபடுத்த வேண்டும்.

    • உருகிய வெண்ணெய் கொண்ட பாத்திரத்தில், பிரவுன் சர்க்கரை, வெண்ணிலா மற்றும் தேன் ஆகியவற்றைச் சேர்க்கவும்.

    • ஒரு கணிசமான மிக்சிங் பேசினில், ஓட்ஸ், உலர்ந்த பழங்கள், பாதாம், வேர்க்கடலை, சூரியகாந்தி விதைகள் மற்றும் ரைஸ் கிருஸ்பி சேர்த்து கிளற வேண்டும்.

    • வெண்ணெய் கலவை மற்றும் பிற பொருட்களை வேறு ஒரு பேசினில் போட்டு நன்றாக கலக்க வேண்டும்.

    • மீதமுள்ள பொருட்கள் வைத்து பார் செய்யபடுகிறது.

    • சாப்பிடுவதற்கு முன் கிரானோலா பார்களை குறைந்தது ஒரு மணிநேரம் ஃபிரிஜ்ஜில் வைக்க வேண்டும்.

    முந்திரி பிஸ்கட்(Cashew Cookies)

    • ஒரு சிறிய கப்பில் கோகனட் மீல் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    • டிரெஸ்ஸிங் செய்ய, முந்திரி பட்டர் மற்றும் இனிப்பில்லாத வெண்ணிலா எக்ஸ்ட்ராக்ட் முதலியவற்றைக் கலந்து சில நிமிடங்களுக்கு ஃபிரிஜ்ஜில் வைக்க வேண்டும்.

    • ஒரு பிஸ்கட் செய்ய இரண்டு டீஸ்பூன் பிஸ்கட் மாவைப் பயன்படுத்த வேண்டும்.

    • மாவை 1.5 அங்குல டிஸ்கில் கம்ப்ரஸ் செய்து, ஒரு பாத்திரத்தில் வைப்பதற்கு முன் குளிர்விக்க வேண்டும்.

    கர்ப்ப காலத்தில் சூரியகாந்தி விதைகள் எடுத்துக் கொள்வது சிறந்த யோசனை தான் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இதனை நாம் அப்படியே அல்லது வறுத்து அல்லது முளைக்கட்டி என எப்படி வேண்டுமானாலும் சாப்பிடலாம்.

    Tags :

    Sunflower seeds in pregnancy in tamil, sunflower seeds during pregnancy in tamil, uses of sunflower seeds during pregnamcy in tamil, benefits of sunflower seeds in pregnancy in tamil, risks of sunflower seeds in pregnancy in tamil, nutritional value of sunflower seeds in tamil, sunflower seeds recipes in tamil

    Is this helpful?

    thumbs_upYes

    thumb_downNo

    Written by

    Atreyee Mukherjee

    Get baby's diet chart, and growth tips

    Download Mylo today!
    Download Mylo App

    RECENTLY PUBLISHED ARTICLES

    our most recent articles

    Image related to Medications

    Medications

    கர்ப்ப காலத்தில் ஈகோஸ்பிரின் மாத்திரையை எடுத்துக் கொள்வதால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா?| Are There Any Side Effects Of Taking Ecosprin In Pregnancy in Tamil

    Image related to Pregnancy Tests

    Pregnancy Tests

    30 நாட்களில் கர்ப்பம் உறுதி செய்ய முடியுமா?|Can pregnancy be confirmed in 30 days in Tamil

    Image related to Conception

    Conception

    ஐ.யூ.ஐ (IUI) (கருப்பைக்குள் விந்தணுவைச் செலுத்துதல்) என்பது வலி நிறைந்ததாக இருக்குமா? | Is IUI (Intra Uterine Insemination) Painful in Tamil

    Image related to Home Remedies

    Home Remedies

    பச்சிளங் குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல் மற்றும் சளிக்கான 10 வீட்டு வைத்தியங்கள்-10 Home Remedies For Cough And Cold In Toddlers in Tamil

    Image related to undefined

    அண்டவிடுப்பின் காலம் - மிகவும் வளமான சாளரம், கர்ப்பத்திற்கான தடையைத் திறக்கவும் |Ovulation Period-The Most Fertile Window, Open the Roadblock to Pregnancy in Tamil

    Image related to Love, Sex & Relationships

    Love, Sex & Relationships

    பாலியல் உறவுக்குப் பிறகு கர்ப்பம் அடைவதை இயற்கையாக தவிர்ப்பது எப்படி| How To Avoid Pregnancy Naturally After Sex in Tamil

    foot top wavefoot down wave

    AWARDS AND RECOGNITION

    Awards

    Mylo wins Forbes D2C Disruptor award

    Awards

    Mylo wins The Economic Times Promising Brands 2022

    AS SEEN IN

    Mylo Logo

    Start Exploring

    wavewave
    About Us
    Mylo_logo

    At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:

    • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
    • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
    • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.