This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
Track your pregnancy journey

கர்ப்ப காலத்தின் போது, முடி கொட்டுவது இயல்பானதா, அதனை எவ்வாறு சமாளிப்பது? (Is it normal to experience hair fall during pregnancy, and how to deal with it In Tamil)

Hair Problems
Written by - Avira Paraiyarகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Dec 12, 2025
கர்ப்ப காலத்தின் போது, முடி கொட்டுவது இயல்பானதா, அதனை எவ்வாறு சமாளிப்பது? (Is it normal to experience hair fall during pregnancy, and how to deal with it In Tamil)
Likes1 Likes|
Read time8 min

ஒரு பெண்ணின் வாழ்வில் கர்ப்ப காலம் என்பது வாழ்க்கையையே ஒட்டுமொத்தமாக மாற்றி விடக் கூடிய ஒரு கால கட்டம் என்பது மறுக்க முடியாத உண்மை. நீங்கள் நடக்க முடியாதது என்று ஒரு காலத்தில் நினைத்த மாற்றங்களை கூட கர்ப்ப காலத்தில் உங்கள் உடல் சார்ந்து அனுபவிக்க நேரிடலாம். மாற்றங்கள் மிகப் பலவாக இருக்கும் போதிலும், அவற்றில் நல்லவை, கெட்டவை ஆகிய இரண்டுமே இருக்கும். அதில் பாதியளவு மாற்றங்களை குறித்து நீங்கள் பெருமை கொள்ளக் கூடும். மறு பாதி மாற்றங்களின் காரணமாக நீங்கள் உங்களுடைய உடல் குறித்தான கேள்விகளையும், இத்தனை காலம் நீங்கள் வாழ்ந்த வாழ்க்கையை குறித்த கேள்விகளையும் எழுப்பக் கூடும். கர்ப்ப காலத்தில் தோன்றும் இத்தகைய கவலையளிக்கும் மாற்றங்களில் ஒன்று தான், முடி கொட்டும் பிரச்சினை. இந்த பிரச்சினை முற்றிலும் சோர்வளிக்கக் கூடிய பிரச்சினை தான். குறிப்பாக உங்கள் வயிற்றில் இன்னொரு உயிரையும் சுமந்து கொண்டு அதன் தேவைகளையும் கவனித்துக் கொண்டிருக்கும் வேளையில் இது அநாயாசத்தை ஏற்படுத்தும்.

உங்கள் கர்ப்ப காலத்தின் போது முடி கொட்டுவது இயல்பான விஷயம் தானா? (Is hair fall a normal thing to experience during your pregnancy? In Tamil)

எல்லா கர்ப்பிணிப் பெண்களுக்கும் முடி கொட்டும் பிரச்சினை ஏற்படுவதில்லை. ஆதலால், இந்த கேள்வி உங்கள் மனதில் தோன்றக் கூடும். கர்ப்பிணிப் பெண்களில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான பெண்களே இந்த பிரச்சினையை சந்திக்கிறார்கள். இது வழக்கத்திற்கு மாறானதாக இருந்தாலும் கூட, முடி கொட்டுவது ஒரு இயல்பான பிரச்சினை தான் என்பதை உங்களுக்கு உறுதியாக கூறுகிறோம். கர்ப்ப காலத்தில் உங்கள் உடலில் பல இலட்சக்கணக்கான மாற்றங்கள், வெளியே கவனிக்கத்தக்க வகையிலும், வெளியே தெரியாத வகையிலும் ஏற்படுகின்றன. ஹார்மோன்கள் காரணமாக தான் இந்த மாற்றங்கள் ஏற்படுகின்றன.

நம் உடலில் உற்பத்தி ஆகும் ஹார்மோன்களின் அளவு கர்ப்ப காலத்தில் குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்தோ அல்லது குறைவாகவோ காணப்படுகின்றன. இந்த சமயத்தில் உங்கள் உடலில் உள்ள ஈஸ்ட்ரோஜென் அளவு அதிகரிப்பதன் காரணமாக, உங்கள் கூந்தல் நீளமாகவும், மினுமினுப்பாகவும், பிரகாசமாகவும் வளரும் என்று எதிர்பார்ப்பது இயல்பு. ஆயினும் இதற்கு உத்தரவாதம் இல்லை.

கர்ப்ப காலத்தின் போது முடி கொட்டுவதற்கான காரணங்கள்(Reasons for hair fall during pregnancy In Tamil)

கர்ப்ப காலத்தின் ஒவ்வொரு படிநிலைகளுக்கும் ஏற்றவாறு உங்கள் முடி உதிர்வு அளவு பெருமளவில் மாறுபாடுகள் கொண்டிருக்கும். பெரும்பாலான பெண்கள் பேற்றுக்குப் பின் அதிக அளவில் முடி உதிர்வினை சந்திக்கிறார்கள். அதாவது குழந்தை பிறந்த பின்னர் அதிக அளவு முடி கொட்டுகிறது. உங்களுக்கு ஏன் முடி கொட்டுகிறது என்பதற்கான சரியான காரணத்தை நீங்கள் அறிய விரும்பினால், உங்களுக்கான சில ஆலோசனைகள் பின்வருமாறு:-

ஹார்மோன்கள்(Hormones):

இது தான் பொதுவான காரணமாகும். உங்கள் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் குறித்து முன்கூட்டியே அறிந்து சொல்லுவதும் இயலாது அல்லது அதனை சரியான சுழற்சியை நோக்கி இட்டுச் செல்வதற்கும் இயலாது. இந்த மாற்றங்களானது எப்போதுமே உங்கள் வாழ்க்கைமுறை, உடல் ரீதியான மற்றும் உளவியல் நலம் போன்ற பல்வேறு காரணிகளை பொறுத்தே ஏற்படுகின்றன. இந்த மாற்றங்கள் ஏற்படும் போது, அவை உங்கள் வாழ்வின் ஏதேனும் ஒரு அம்சத்தை மேம்படுத்தும் அல்லது அதன் மதிப்பை குறைத்து விடும். இது உங்கள் தோற்றம், உங்கள் நடத்தை போன்றவற்றை குறித்ததாக இருக்கலாம்.

முடி கொட்டும் பிரச்சினையில், ஹார்மோன்கள் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கின்றன. உடலில் சமமின்மை அல்லது புதிய இயல்பானது தலைமுடியை இளைப்பாறும் கட்டத்திற்கு கொண்டு வந்து விடலாம். தலைமுடி வளர்ச்சியின் நடைமுறையில், இளைப்பாறும் கட்டம் என்பது ஒரு பகுதி தான். ஒரு வேளை இந்த இளைப்பாறும் கட்டமானது அதிகப்படியாகவோ அல்லது நீண்டு கொண்டு போனால், சராசரியாக ஏற்படுவதை விடவும் அதிக முடி உதிர்வு உங்களுக்கு ஏற்படும். கர்ப்பிணிப் பெண்களுக்கு நேரும் மன அழுத்தம், அதிர்ச்சி, கவலை, மற்றும் பிற உணர்வுகளின் காரணமாக இந்த கடுமையான ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும். உடலில் சமநிலை பாதிக்கப்பட்டாலும் கூட, குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்தையும் வழங்குவதற்கு உடல் முயற்சி எடுக்கிறது.

குழந்தை பேறுக்குப் பின் ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் பிற உடல்நல பிரச்சினைகள்(Postpartum and other health conditions):

உங்கள் குழந்தை பேறுக்குப் பின் டெலோஜென் எஃப்ளூவியம் எனப்படும் பிரச்சினை உங்களுக்கு ஏற்படும் வாய்ப்புள்ளது. இந்த பிரச்சினை ஏற்படும் போது, உங்கள் தலைமுடி வளர்ச்சியின் சுழற்சி குறுக்கீடு செய்யப்பட்டு பாதிக்கப்படுவதால், முடி உதிர்வினை ஏற்படுத்தும். மேலும், இந்த புதிய மற்றும் ஏற்கனவே இருக்கும் முடி வளர்ச்சியையும் பாதிக்கிறது. எனவே, நீங்கள் உங்கள் கூந்தல் மெலிதாவதையும், உங்கள் முடி அடர்த்தி குறைவதையும் காண நேரிடும்.

உடல் நல பிரச்சினைகள் என்பது சமீபத்தில் நேர்ந்த மாற்றங்கள் மற்றும் இழப்புகளின் காரணமாக உங்கள் உடலில் ஏற்படுகின்ற பற்றாக்குறையை குறிக்கிறது. பொதுவாகவே இரும்புச்சத்து குறைபாடு ஏற்படும். ஆயினும் பிற ஊட்டச்சத்துக்களும் கூட இல்லாமல் போகலாம். முடி உதிர்விற்கு தைராய்டு கூட காரணமாக இருக்கலாம்.

கவனக்குறைவின் காரணமாகவோ அல்லது கெட்ட பழக்கங்களின் காரணமாக கூட முடி உதிர்வு ஏற்படும். கர்ப்ப காலத்தில் நீங்கள் கவனித்துக் கொள்ள வேண்டிய பிற சிக்கல்கள் அல்லது விஷயங்கள் இருப்பதால் இது புரிந்து கொள்ளக் கூடிய ஒன்று தான். மேலும் உங்கள் தலைமுடியை இறுக்கமாக கட்டுவதன் காரணமாகவோ அல்லது அடிக்கடி இழுப்பதன் காரணமாகவோ கூட முடி உதிர்வு ஏற்படலாம்.

கர்ப்ப காலத்தில் ஏற்படும் தலைமுடி உதிர்விற்கு எப்படி சிகிச்சை அளிப்பது?(How to treat hair loss caused by pregnancy? In Tamil)

கர்ப்ப காலத்தில் ஏற்படும் எல்லா மாற்றங்களையும் போல, முடி உதிர்வும் கூட தற்காலிகமானது தான். உங்கள் கர்ப்ப காலத்தின் மூன்றாம் மாதத்திலிருந்து, பிரசவத்திற்கு பின் மூன்று முதல் நான்கு மாதங்கள் வரையிலும் முடி உதிர்வு பிரச்சினை உங்களுக்கு ஏற்படும் வாய்ப்பிருக்கிறது. சரியான நடவடிக்கைகள் மேற்கொள்ளும் பட்சத்தில், ஆரோக்கியமான தலைமுடியை மீண்டும் விரைவாகவே பெற்று விடலாம். சில பெண்களுக்கு கர்ப்ப காலத்திற்கு பின்னர் தலைமுடி அதிக அடர்த்தியாகிறது. முடி உதிர்வு பிரச்சினையை சரி செய்வதற்கு பலனளிக்கக் கூடியதென்று நம்பப்படும் பல்வேறு விதமான வழிமுறைகளை கண்டு நீங்கள் குழப்பமடைய நேரிடலாம். ஆயினும் நன்கு கவனமாக பரிசீலித்த பிறகு உங்களுக்கான சிறந்ததொரு தீர்வினை நாங்கள் தீர்மானித்திருக்கிறோம். அதுதான் ஆனியன் ஹேர் ஆயில்!

ஆனியன் ஹேர் ஆயில் என்றால் என்ன?(What is Onion Hair Oil? In Tamil)

ஆனியன் ஹேர் கேர் ஆயில் என்பது அதன் பெயரை வைத்தே விளங்கி கொள்ளக் கூடியது; குறிப்படப்பட்ட சில வழிமுறைகளின் மூலம், வெங்காயங்களிலிருந்து எண்ணெய் பிரித்தெடுக்கப்பட்டு, உலகம் முழுவதும் உள்ள மக்களின் தலைமுடி பராமரிப்பிற்கு பயன்படுத்தப்படுகிறது. தலைமுடி பராமரிப்பிற்கு வெங்காயம் பயனளிக்கக் கூடுமா என்று ஐயம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனாலும், கடந்த சில வருடங்களாகவே உலகெங்கிலும் உள்ள நிபுணர்கள் இதன் பலன் குறித்து உறுதி அளித்துள்ளனர். ஆனியன் ஆயில் ஃபார் ஹேர் கிரோத்தின் நன்மைகள் குறித்தான பட்டியல் நீண்டு கொண்டே போகும். நீங்கள் புரிந்து கொள்வதற்காக சில பலன்கள் பின்வருமாறு:

  • ஆன்டிஆக்சிடன்ட்கள் (ஆக்சிஜனேற்றத்தடுப்பான்) மூலமாக முடி வளர்ச்சியை மேம்படுத்துவது

  • முடி அடர்த்தியாவதற்கு தேவையான இரத்த ஓட்டம் அதிகரித்தல்

  • வழுக்கையை கூட சரி செய்யும் அளவிற்கு முடி வளர்ச்சி அதிகரித்தல்

  • எண்ணெயிலுள்ள சல்ஃபர் நுனி பிளவு அல்லது முடி உடைவதை தடுக்கிறது

  • முடியின் ஆக்சிஜன் ஏற்றத்தை தடுப்பதன் மூலம், முன்கூட்டியே நரை ஏற்படுவதை தடுக்க உதவுகிறது

  • எந்த எண்ணெயுடனும் இதை கலக்கலாம்

  • பொடுகை உண்டாக்கும் பாக்டீரியாவை அழிக்கிறது

  • நன்கு ஊட்டம் அளித்து, வறண்ட, சிக்குமுடி ஏற்படாமல் தடுக்கிறது.

நீங்கள் ஆனியன் ஆயில் ஃபார் ஹேர் கேர்-ஐ மிக எளிதாக சங்கடமின்றி பயன்படுத்தலாம். கர்ப்ப காலம் மிகவும் பொறுப்பு உடையதாகவும், ஆயினும் சோம்பல் தரக் கூடியதாகவும் இருக்கும். தினசரி நடவடிக்கைகள் கூட மிகவும் சிக்கலான வேலைகள் போல தோன்றும். ஆனாலும், ஆனியன் ஆயில் ஃபார் ஹேர்-ஐ பயன்படுத்துவது உங்கள் அன்றாட வேலைகளில் எந்த இடைஞ்சலையும் ஏற்படுத்தாது, மிக சுலபமாக பயன்படுத்தக் கூடியது தான். இந்த தயாரிப்பினை உங்கள் அன்றாட வாழ்க்கைமுறையில் சேர்த்துக் கொள்வதற்கு பல வழிகள் உள்ளன. அதாவது குளிப்பதற்கு முன்னர் இதனை தடவுவது, இரவில் தடவிக் கொள்வது போன்றவை. சிறந்த பலன்களை பெறுவதற்கு ஆனியன் ஆயில் ஹேர் கேர் கிட்-ஐ தேர்வு செய்து பயன்படுத்தலாம். ஆனியன் ஷாம்பூ-க்கள் மற்றும் கண்டிஷனர்கள் போன்ற வெங்காயம் சார்ந்த பல தயாரிப்புகள் கிடைக்கப்பெறுகின்றன. ஆனியன் ஆயில் ஹேர் கேர் காம்போ-வில் நீங்கள் சுலபமாக இவற்றை பெற்றுக் கொள்ளலாம். உபயோகித்துப் பார்த்த பின் அதன் பலன்களை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

முடிவுரை(Conclusion)

இப்போது உங்களுக்கு கர்ப்ப காலத்திலும், பிரசவத்திற்கு பிறகும் முடி உதிர்வு பிரச்சினைகளை கையாள்வது குறித்து தெரிந்திருக்கும். இந்த மாற்றங்கள் எல்லாமே தற்காலிகமானது தான் என்றும், நீங்கள் விரைவிலேயே முன்னர் இருந்தது போல் இயல்பாக உணர்வீர்கள் என்பதையும் நினைவுபடுத்திக் கொண்டே இருக்கவும். உங்களை தொடர்ச்சியாக ஊக்குவித்துக் கொள்வதும், ஆரோக்கியமான அன்றாட வாழ்க்கைமுறையை பேணுவதும் தான் மிக முக்கியமாகும். தற்சோர்வடையும் வாய்ப்புகள் அதிகம். ஆயினும், எப்படி இருந்தாலும் நீங்கள் அழகானவர் என்பதை நினைவில் நிறுத்தவும். கர்ப்பகாலம் மகிழ்வாக அமைய வாழ்த்துக்கள்!

TAGS :

Hairfall during pregnancy in tamil, is hairfall normal during pregnancy in tamil, how to cure hairfall during pregnancy in tamil, tips to hairfall during pregnancy in tamil, Is it normal to experience hair fall during pregnancy, and how to deal with it in Telugu, Is it normal to experience hair fall during pregnancy, and how to deal with it in Bengali, Is it normal to experience hair fall during pregnancy, and how to deal with it in Hindi, Is it normal to experience hair fall during pregnancy, and how to deal with it in English

Is this helpful?

thumbs_upYes

thumb_downNo

Your parenting partner
in your pocket.

Access 24/7 expert tools, trackers, and a
supportive community.
Mylo App Banner

Your parenting partner
in your pocket.

Access 24/7 expert tools, trackers, and a
supportive community.
Apple App StoreGoogle Play Store
Apple App StoreGoogle Play Store

Article Posted Under

Helpful Tools & Calculators

undefined icon
Pregnancy Calendar
See baby growth week by week
arrow_right
undefined icon
Mylo Store
Shop for mom & baby
arrow_right
undefined icon
Pregnancy Diet Chart
Trimester & region-wise diet plan
arrow_right
undefined icon
Mamasutra
Safe positions for pregnancy
arrow_right
undefined icon
Save Memories
Store baby's photos & firsts
arrow_right
undefined icon
Weight Tracker
Monitor your weight
arrow_right
undefined icon
Zordar Dadi Ke Nuskhe
Gharelu nushke that work
arrow_right
undefined icon
My Calendar
Predict periods & record symptoms
arrow_right
undefined icon
Ovulation Calendar
Know your monthly cycle
arrow_right
undefined icon
Pill Reminder
Get reminded for medicines
arrow_right
undefined icon
Vaccination Tracker
Never miss a vaccine date
arrow_right
undefined icon
Make Baby Sleep
Play white noise & sleep music
arrow_right
undefined icon
Pregnancy Music
Play calming music for baby
arrow_right
undefined icon
Baby Diet Chart
Age-wise food plans for baby
arrow_right
Avira Paraiyar
Avira Paraiyar

Related Articles

Questions about this article

  • Asked when 24 weeks pregnant

    Now I'm 5th month pregnancy thn scan report said in ur baby head near cyst so it's any problem?

  • 31 weeks pregnant

    Mam I am 8 month pregnancy so ennaku konjam yoga dips venum

  • trying to conceive

    மூன்று நாட்கள் தள்ளிப் போய் இருக்கு. ஆனால் ஒரு வாரமாக வயிற்று வலி அப்பப்ப ஒரு ஐந்து நிமிடங்களுக்கு இருக்கிறது அடிவயிற்றில் வலி இருக்கிறது மீடியமாக கால் வலி இருக்கிறது என்ன கொடுக்கலாம்? என்ன செய்யலாம் என்று உங்கள் ஆலோசனை வேண்டும் தயவு செய்து எங்களுக்கு உடனடியாக ரிப்ளை செய்யுங்கள்

  • 29 weeks pregnant

    3 மந்த் பேபி எப்படி இருக்கும்

  • Asked by 8 weeks pregnant

    அடிக்கடி அடி வயிற்று வலி ரொம்ப வலியா இருக்கிறது இதற்கு என்ன செய்ய வேண்டும்

Recently Published Articles

Your body needs extra nutrition this trimester - these can help.

Medical Disclaimer

This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

foot top wavefoot down wave

AWARDS AND RECOGNITION

Awards

Mylo wins Forbes D2C Disruptor award

Awards

Mylo wins The Economic Times Promising Brands 2022

AS SEEN IN

Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on TOI
Mylo featured on inc42
Mylo featured on Business Standard
Mylo featured on YourStory
Mylo featured on ANI
Mylo Logo

Start Exploring

wavewave
About Us
Mylo_logo
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
  • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
  • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
  • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.