
இன்ட்ராஉத்திரேன் இன்செமிநேஷன் /கருப்பையில் கருவூட்டல் (ஐயூஐ) முறையை, கருவுறா நிலைக்கு மாற்றுச் சிகிச்சை செயல்முறை எனலாம். இது சூலாக்கத்தின்(ஒவியூலேஷன்) போது கருப்பையில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட முட்டைகளைக் கருவுறுதலுக்கு வெளியிடும் நேரத்தில் விந்துவை நேரடியாகக் கருப்பையில் பொறுத்தும் சிகிச்சை முறையாகும்.
இன்ட்ராஉத்திரேன் இன்செமிநேஷனின் விளைவாக விந்தணுக்கள் ஃபலோபியன் குழாயில் சென்று முட்டையை கருவுறச் செய்வதால் பெண் கர்ப்பம் தரிக்கிறார். இந்த வகையான செயற்கை கருவூட்டு முறை பின்வரும் தம்பதிகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது:
காரணமற்ற மலட்டுத்தன்மைக்கான சிகிச்சையாக இது மேற்கொள்ளப்படுகிறது.
எண்டோமெட்ரியோசிஸ் உடன் தொடர்புடைய கருவுறாமைக்கு, மருந்துகளுடன் ஐயூஐ மேற்கொள்வது முதல் சிகிச்சை அணுகுமுறையாகப் பயன்படுத்தப்படுகிறது.
விந்து சோதனையில் சராசரிக்குக் குறைவான விந்தணுக்களின் செறிவு, விரைவான ஓட்டமின்மை அல்லது விந்தணு வடிவம் மற்றும் அளவு ஆகியவற்றில் அசாதாரணம் ஆகியவற்றைக் காணலாம். இது போன்ற பிரச்சனைகளை ஐயூஐ மூலம் சமாளிக்க முடியும், ஐயூஐ-இல் குறைந்த தரம் கொண்ட விந்தணுக்களில் ஆரோக்கியமான விந்தணுவைப் பிரித்தெடுத்து கருவூட்டலுக்கு உதவலாம்.
சூலாக்கத்தில் சிக்கல் அல்லது குறைந்த எண்ணிக்கையிலான முட்டை போன்ற பிரச்சனை உள்ள பெண்களுக்கு ஐயூஐ உபயோகிக்கலாம்.
சூலாக்கத்தின் போது, விந்தணுக்கள் பெண்குறியிலிருந்து ஃபலோபியன் குழாய்களுக்குப் பயணிக்க உதவும் வகையில் பெண்ணின் கருப்பை வாய் சளித்திரவத்தை உருவாக்குகிறது. ஆனால் இச்சளித்திரவம் திண்மையாக இருந்தால், அது விந்தணுவின் பயணத்தைப் பாதித்து முட்டையை அடைவதை தடுக்கும்.
இதையும் படிக்கலாமே! - IUI (Intrauterine Insemination) பரிசோதனைக்கு விந்தணு பெறுவது எப்படி?
இன்-விட்ரோ/ஆய்வுக் கூட சோதனைமுறை கருத்தரித்தலுடன் ஒப்பிடும்போது ஐயூஐ என்பது இன்வேசிவ் முறை இல்லாதது மற்றும் அதிக செலவற்ற கருவுறுதல் முறையாகும். இருப்பினும், பின்வரும் சூழ்நிலைகளில் ஐயூஐ பயன் தராது:
மிதமான முதல் தீவிர எண்டோமெட்ரியோசிஸ்
ஃபலோபியன் குழாய்கள் அகற்றப்பட்ட நிலை
தீவிர ஃபலோபியன் குழாய் நோய்
பல பெல்விக் நோய்த்தொற்றுகளால் அவதிப்படுதல்
விந்து உற்பத்தி செய்ய இயலாத ஆண்கள்
ஐயூஐ சிகிச்சையின் வெற்றி விகிதம் வயது, அடிப்படை நோயறிதல், கருவுற மருந்துகளின் பயன்பாடு மற்றும் பிற கருவுறுதல் சிக்கல்கள் ஆகியவற்றைப் பொறுத்தது.
ஐயூஐ சிகிச்சைக்கு முன் பின்வருவன மேற்கொள்ளப்படுகிறது :
துணைவரின் விந்து மாதிரி சேகரிக்கப்படுகிறது. விந்துவில் உள்ள விந்தணு அல்லாத கூறுகள் பெண்ணின் கருத்தரிப்பில் குறுக்கிட்டு எதிர்வினைகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால், மாதிரியிலிருந்து உயர்தர விந்தணுவை பிரிதத்தெடுக்கும் விதத்தில் அது கழுவப்படுகிறது. இது கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பை மேம்படுத்துகிறது.
ஐயூஐ மேற்கொள்ளும் நேரம் முக்கியமானது என்பதால், உடலில் லுடினைசிங் ஹார்மோனின் வெளியீட்டைக் கண்டறிய ஹோம் யூரின் ஓவலூஷன் கிட் பயன்படுத்த வேண்டியிருக்கும்.
ஐயூஐ பெரும்பாலும் சூலாக்கத்தைக் கண்டறிந்த ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்குப் பிறகு மேற்கொள்ளப்படுகிறது.
வீட்டில் கர்ப்ப பரிசோதனைக்கு முன் இரண்டு வார இடைவெளி தேவைப்படலாம். கர்ப்ப ஹார்மோன்கள் இன்னும் அளவிடக்கூடிய அளவில் இல்லாத நிலை அல்லது சூலாக்கத்தைத் தூண்டும் மருந்தின் காரணமாகக் கர்ப்பத்தைக் குறிக்கும் தவறான பாசிவிடிவ் முடிவு வெளியாக வாய்ப்புள்ளதால் அதற்கு முன் சோதனை செய்வது எதிர்மறையான முடிவைக் காட்டலாம்
இரண்டு வாரங்களுக்குப் பிறகு ஹோம் கிட் சோதனையில் கர்ப்பமாக இல்லை என்றால், நீங்கள் மற்ற கருவுறுதல் சிகிச்சைகள் அல்லது அதே சிகிச்சையை மூன்று முதல் ஆறு மாத இடைவெளியில் முயற்சி செய்யலாம்.
IUI treatments in tamil, informarions about IUI treatments in tamil, All that you need to know about IUI (Intrauterine Insemination) Treatment for Pregnancy In English, All that you need to know about IUI (Intrauterine Insemination) Treatment for Pregnancy In Hindi, All that you need to know about IUI (Intrauterine Insemination) Treatment for Pregnancy In Telugu, All that you need to know about IUI (Intrauterine Insemination) Treatment for Pregnancy In Bengali
Yes
No
Influenza and boostrix injection kisiko laga hai kya 8 month pregnancy me and q lagta hai ye plz reply me
Hai.... My last period was in feb 24. I tested in 40 th day morning 3:30 .. That is faint line .. I conculed mylo thz app also.... And I asked tha dr wait for 3 to 5 days ... Im also waiting ... Then I test today 4:15 test is sooooo faint ... And I feel in ma body no pregnancy symptoms. What can I do .
Baby kicks KB Marta hai Plz tell mi
PCOD kya hota hai
How to detect pcos
Your body needs extra nutrition this trimester - these can help.





This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

Mylo wins Forbes D2C Disruptor award

Mylo wins The Economic Times Promising Brands 2022
Baby Carrier | Baby Soap | Baby Wipes | Stretch Marks Cream | Baby Cream | Baby Shampoo | Baby Massage Oil | Baby Hair Oil | Stretch Marks Oil | Baby Body Wash | Baby Powder | Baby Lotion | Diaper Rash Cream | Newborn Diapers | Teether | Baby Kajal | Baby Diapers Pants | Cloth Diapers | Laundry Detergent | Lactation Granules |