This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
Track your pregnancy journey

கர்ப்பகாலத்தில் ராகி/கேழ்வரகு சாப்பிடுவதினால் ஏற்படும் நன்மைகள்(Benefits of Eating Ragi During Pregnancy In Tamil)

Diet & Nutrition
Written by - Avira Paraiyarகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Nov 3, 2023
கர்ப்பகாலத்தில் ராகி/கேழ்வரகு சாப்பிடுவதினால் ஏற்படும் நன்மைகள்(Benefits of Eating Ragi During Pregnancy In Tamil)
Likes11 Likes|
Read time6 min

கர்ப்பகாலத்தில் ராகியின் நன்மைகள் மற்றும் அதன் ஊட்டசத்து மதிப்பு(Ragi During Pregnancy: Benefits and Nutritional Value in tamil?)

கர்ப்பகாலத்தில் ராகி சாப்பிடுவது தாய் மற்றும் குழந்தை இருவருக்கும் அதிக நன்மைப்பயக்கும். இந்த தானியம் பல தெற்காசிய உணவு வகைகளில் உணவின் ஊட்டச்சத்து மதிப்பை அதிகரிக்க பயன்படுத்தப்படுகிறது. கேழ்வரகில் புரதம், தாது உப்புகள், கால்சியம், இரும்பு மற்றும் இயற்கை கொழுப்புகள் உள்ளன. இந்த ஊட்டச்சத்துக்கள் சரியான கருவின் வளர்ச்சிக்கு பங்களிப்பது மட்டுமின்றி தாயையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன.

ராகி என்றால் என்ன?(what is ragi in tamil)

இந்தியாவில் ராகி பிரபலமான தானியம். மேலும், இது பல வகையான உணவு வகைகளை தயாரிக்க உதவுகிறது. இந்த தானியம் பார்ப்பதற்கு கடுகு போல் இருக்கும், மேலும் இது ஆங்கிலத்தில் ஃபிங்கர் மில்லட் எனவும் அழைக்கப்படுகிறது. ராகி மாவில் தோசைகள், இட்லிகள், ராகி அடை மற்றும் கஞ்சி போன்றவற்றை சமைக்கலாம்.

ராகி அளவு மிக சிறியது என்பதால் அது பதப்படுத்த முடியாத தானியம். ராகியின் அதிக இரும்பு மற்றும் கார்போஹைட்ரேட் சத்து அதை அனைவருக்கும் ஏற்ற காலை உணவாக திகழ உதவுகிறது.

கர்ப்ப காலத்தில் சாப்பிட ராகி பாதுகாப்பானதா?(Is Ragi safe to consume during pregnancy in tamil?)

ராகியில் பல ஆரோக்கிய நன்மைகள் இருப்பினும், கர்ப்ப காலத்தில் ராகி சாப்பிட்டால் குழந்தை கருப்பாக பிறக்கும் என்று நம்புவதினால் சில கர்ப்பிணிகள் அதை சாப்பிடுவதை தவிர்க்கின்றனர். இது ஒரு முட்டாள்தனமான கட்டுக்கதையாக இருப்பினும், ராகி குழந்தையின் நிறத்தை பாதிக்கும் என்பதற்கு எந்தவிதமான அறிவியல் சான்றும் இல்லை. குழந்தையின் நிறம் என்பது அவர்களது முற்றிலும் அவர்களது மூதாதையர்களின் மரபு பண்பை சார்ந்ததே.

இன்னும் சொல்லப்போனால் ராகி, குழந்தைப்பேற்றுக்கு பின் அம்மாக்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில் இது மலச்சிக்கலை தவிர்க்கும், தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும் மற்றும் தூக்கமின்மையை குணப்படுத்தும். இதெல்லாம் ஒருப்பக்கம் இருக்க, ராகியை உணவில் சேர்த்துக்கொள்வதற்கு முன் எதற்கும் ஒருமுறை கர்ப்பிணிகள் மருத்துவரை கலந்தாலோசிப்பது சாலச்சிறந்தது.

ராகியின் ஊட்டச்சத்து தகவல்கள்(Ragi Nutritional Information in tamil?)

  • ராகி என்பது பொருட்களின் ஆற்றல்கூடம் எனக் கருதப்படுகிறது, ஏனெனில், அது அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை.

  • ராகியில் அத்தியாவசிய வைட்டமின்கள், புரதங்கள், இரும்பு மற்றும் கொழுப்புகளுடன் பலவகையான மைக்ரோ மற்றும் மேக்ரோ ஊட்டசத்துக்கள் நிறைந்திருக்கின்றன.

  • ராகி என்பது ஐசோலூசின் மற்றும் வாலைன் போன்ற அட்டகாசமான தாவரம் சார்ந்த அமினோ அமிலங்களின் ஆதாரங்களை கொண்டது.

  • ராகியில் அதிகளவு வைட்டமின் சி, வைட்டமின் இ, ஃபோலிக் ஆசிட் மற்றும் கால்சியம் நிறைந்திருக்கிறது.

  • ராகியில் 100 கிராமிற்கு 336 kcal அதிக கார்போஹைட்ரேட் உள்ளடக்கம் இருக்கிறது.

கர்ப்பகாலத்தில் ராகியின் ஆரோக்கிய சார்ந்த நன்மைகள்(Ragi's Health Benefits During Pregnancy in tamil)

கர்ப்ப காலத்தில் ராகி உண்பதால் ஏற்படும் நன்மைகளை குறைவாக மதிப்பிடுவது சரியல்ல, ஏனெனில் இது தாய்மார்களுக்கும், குழந்தைக்கும் ஏராளாமான ஊட்டச்சத்துக்களை வழங்கும் அற்புதமான உணவு. ராகியின் அதீத ஊட்டச்சத்து மதிப்பானது அம்மாக்களுக்கு போதிய ஆற்றலை அழிக்க உதவுவது மட்டுமின்றி, கரு வளர்ச்சியில் எந்தவித பிரச்சனையும் ஏற்படாமலிருக்கவும் உதவுகிறது.

கர்ப்ப காலத்தின் போது ராகி உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் பின்வருமாறு.

1. அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்களின் ஆதாரம்(Source of essential nutrients):

ராகி எனும் தானியத்தில் வைட்டமின்கள், ஊட்டச்சத்துக்கள், நார் சத்துக்கள் மற்றும் இயற்கையான கொழுப்பு சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. இவ்வகை ஊட்டசத்துக்கள் கர்ப்பிணி பெண்களின் ஆரோக்கியத்தை பராமரிப்பது மட்டுமின்றி சிறந்த முறையில் கரு வளரவும் உதவுகிறது.

2. தூக்கமின்மையை குணப்படுத்துதல்(Manages insomnia):

ராகியிலிருக்கும் அமினோ அமிலங்கள் கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் ஹார்மோன் பிரச்சனைகளால் அவதிப்படும் தூக்கமின்மையை போக்க பக்கபலமாக இருக்கிறது.

3. தாய்ப்பால் சுரப்பை மேம்படுத்துகிறது(Enhances breastmilk production):

ராகி அமினோ அமிலம், கால்சியம் மற்றும் இரும்பு சத்து நிறைந்ததாக இருக்கிறது, இது தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும். இந்த ஊட்டச்சத்துக்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் புகட்டும் அம்மக்களுக்கு அத்தியாவசியமானவை.

4.கெஸ்டெஷனல் டயபிட்டீஸை தவிர்க்கும்( Prevents gestational diabetes ):

கெஸ்டெஷனல் டயபிட்டீஸ் ஏற்படும் அபாயத்தில் இருக்கும் கர்ப்பிணிகளுக்கு மருத்துவர்கள் ராகியை பரிந்துரைக்கிறார்கள். ஏனெனில் இதில் பாலிபீனால்களின் அதிக உள்ளடக்கம் இருக்கிறது, இது இயற்கையாக இரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது.

5. மனஅழுத்தத்தை குறைக்கிறது(Relieves stress ):

நிறைந்த மனஅழுத்தத்தில் இருக்கும் கர்ப்பிணி பெண்கள் அல்லது மனசோர்வுக்கு ஆளாகும் பெண்கள் அவசியம் அவர்களது உணவுப்பழக்கத்தில் ராகியை சேர்த்துக்கொள்ள வேண்டும். ராகியில் இருக்கும் அமினோஅமிலம் மனஅழுத்ம் அல்லது மனசோர்வின் அளவுகளை குறைக்க உதவும். மனஅழுத்தத்தை போக்குவதே நமக்கு வரப்பிரசாதமாக இருக்கும், அத்துடன் ராகியானது ஏராளமான ஆரோக்கிய நன்மைகளையும் வழங்கும்.

6. கொலஸ்ட்ரால் அளவுகளை கட்டுப்படுத்துகிறது(Controls cholesterol levels ):

கர்ப்பகாலத்தில் ஏற்படும் அதிக கொலஸ்ட்ரால் அளவுகள் கர்ப்பிணி மற்றும் பிறக்காத குழந்தை என இருவருக்குமே ஹைப்பர்டென்ஷன் மற்றும் மற்ற மருத்துவ பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். ராகியில் சிறந்த அளவு லெசித்தின் மற்றும் மெத்தியோனைன் இருக்கிறது, இது அம்மாக்களின் கொலஸ்ட்ரால் அளவுகளை கட்டுப்படுத்தும்.

7. ரத்த சோகையை தடுக்கும்(Prevents anemic):

கர்ப்ப காலத்தில் ரத்த சோகையை தடுப்பது என்பது மிக முக்கியமானது, ஏனெனில் இது கரு வளர்ச்சியயை பாதிக்கும். கர்ப்பகாலத்தில் ஏற்படும் ரத்த சோகையை தடுக்க உதவும் இரும்பு மற்றும் வைட்டமின் சி அளவுகள் ராகியில் அதிகம் இருக்கின்றன.

இதையும் படிக்கலாமே! - கர்ப்ப காலத்தில் உலர் திராட்சைகள் உண்பதால் ஏற்படும் நன்மைகள், அபாயங்கள் மற்றும் பக்க விளைவுகள்

கர்ப்பகாலத்தில் எவ்வளவு ராகி உட்கொள்வது பாதுகாப்பானது?(How much Ragi is safe to eat during pregnancy in tamil?)

ராகி என்பது ஊட்டசத்து-நிறைந்த உணவு. மேலும் ராகிக்கு ஒருநாளைக்கு இவ்வளவு தான் உண்ண வேண்டும் என்ற எந்த குறிப்பிட்ட அளவும் இல்லை. இருப்பினும், கர்ப்பிணி பெண்கள் அவர்களது உணவு பழக்கத்தில் கூடுதல் பாதுகாப்பாக இருத்தல் அவசியம், ஏனெனில் அது அவர்களது ஆரோக்கியத்தை அதிகம் பாதிக்கும். கர்ப்பகாலத்தில் மருத்துவர் பரிந்துரைக்கும் உணவு திட்டத்தை பின்பற்றுவது மிக அவசியம்.

கர்ப்பகாலத்தில் ராகியின் அதிக உட்கொள்ளல் வயிறு உப்பசம், வயிற்றுப்போக்கு மற்றும் மற்ற செரிமான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். தைராயிட் சமமின்மை அல்லது கிட்னி நோய் போன்ற பிரச்சனைகள் இருக்கும் கர்ப்பிணிகள் ராகியை தவிர்க்க வேண்டும். ராகியில் இருக்கும் அதிக அளவு புரத சத்து மற்றும் ஜியோட்ரோஜெனிக் சேர்மங்கள் இந்த மருத்துவ நிலைகளை அதிகரிக்கும் வாய்ப்பும் இருக்கிறது. கர்ப்பிணிகள் இதுபோன்ற ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகளை தவிர்க்க ராகியை அவர்கள் உணவு பழக்கத்தில் சேர்ப்பதற்கு முன்பு மருத்துவரிடம் கலந்தாலோசிப்பது சாலச்சிறந்தது.

முடிவுரை

கர்ப்பிணிகளுக்கு ஏராளாமான ஊட்டச்சத்துக்களை வழங்கும் அட்டகாசமான உணவு ராகி. இது தாய்மார்களுக்கும், குழந்தைக்கும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்க உதவுகிறது. ராகியைப் பற்றி மேலும் அறிந்துக்கொள்ள மற்றும் அதை எப்படி பல்வேறு ரெசிப்பிகளில் பயன்படுத்துவது என்பதை அறிய மைலோ ஆப்-ஐ பார்க்கவும்.

Tags

Ragi in pregnancy in tamil, ragi during pregnancy in tamil, benefits of ragi during pregnancy in tamil, ragi receipes in tamil, is safe ragi during pregnancy in tamil

Ragi During Pregnancy in English, Ragi During Pregnancy in Hindi, Ragi During Pregnancy in Bengali, Ragi During Pregnancy in Telugu

Is this helpful?

thumbs_upYes

thumb_downNo

Your parenting partner
in your pocket.

Access 24/7 expert tools, trackers, and a
supportive community.
Mylo App Banner

Your parenting partner
in your pocket.

Access 24/7 expert tools, trackers, and a
supportive community.
Apple App StoreGoogle Play Store
Apple App StoreGoogle Play Store

Article Posted Under

Helpful Tools & Calculators

undefined icon
Pregnancy Calendar
See baby growth week by week
arrow_right
undefined icon
Mylo Store
Shop for mom & baby
arrow_right
undefined icon
Pregnancy Diet Chart
Trimester & region-wise diet plan
arrow_right
undefined icon
Mamasutra
Safe positions for pregnancy
arrow_right
undefined icon
Save Memories
Store baby's photos & firsts
arrow_right
undefined icon
Weight Tracker
Monitor your weight
arrow_right
undefined icon
Zordar Dadi Ke Nuskhe
Gharelu nushke that work
arrow_right
undefined icon
My Calendar
Predict periods & record symptoms
arrow_right
undefined icon
Ovulation Calendar
Know your monthly cycle
arrow_right
undefined icon
Pill Reminder
Get reminded for medicines
arrow_right
undefined icon
Vaccination Tracker
Never miss a vaccine date
arrow_right
undefined icon
Make Baby Sleep
Play white noise & sleep music
arrow_right
undefined icon
Pregnancy Music
Play calming music for baby
arrow_right
undefined icon
Baby Diet Chart
Age-wise food plans for baby
arrow_right
Avira Paraiyar
Avira Paraiyar

Related Articles

Questions about this article

  • Asked when 24 weeks pregnant

    Now I'm 5th month pregnancy thn scan report said in ur baby head near cyst so it's any problem?

  • 31 weeks pregnant

    Mam I am 8 month pregnancy so ennaku konjam yoga dips venum

  • trying to conceive

    மூன்று நாட்கள் தள்ளிப் போய் இருக்கு. ஆனால் ஒரு வாரமாக வயிற்று வலி அப்பப்ப ஒரு ஐந்து நிமிடங்களுக்கு இருக்கிறது அடிவயிற்றில் வலி இருக்கிறது மீடியமாக கால் வலி இருக்கிறது என்ன கொடுக்கலாம்? என்ன செய்யலாம் என்று உங்கள் ஆலோசனை வேண்டும் தயவு செய்து எங்களுக்கு உடனடியாக ரிப்ளை செய்யுங்கள்

  • 29 weeks pregnant

    3 மந்த் பேபி எப்படி இருக்கும்

  • Asked by 8 weeks pregnant

    அடிக்கடி அடி வயிற்று வலி ரொம்ப வலியா இருக்கிறது இதற்கு என்ன செய்ய வேண்டும்

Related Topics

Recently Published Articles

Your body needs extra nutrition this trimester - these can help.

Medical Disclaimer

This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

foot top wavefoot down wave

AWARDS AND RECOGNITION

Awards

Mylo wins Forbes D2C Disruptor award

Awards

Mylo wins The Economic Times Promising Brands 2022

AS SEEN IN

Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on TOI
Mylo featured on inc42
Mylo featured on Business Standard
Mylo featured on YourStory
Mylo featured on ANI
Mylo Logo

Start Exploring

wavewave
About Us
Mylo_logo
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
  • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
  • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
  • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.