hamburgerIcon

Orders

login

Profile

STORE
SkinHairFertilityBabyDiapersMore
Tackle the chill with hot discounts🔥 Use code: FIRST10Tackle the chill with hot discounts🔥 Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
  • Home arrow
  • Growth & Development arrow
  • ஓராண்டு முடிவில் குழந்தையின் வளர்ச்சி கட்டம் (Baby Milestones in the First Year of Birth In Tamil) arrow

In this Article

    ஓராண்டு முடிவில் குழந்தையின் வளர்ச்சி கட்டம் (Baby Milestones in the First Year of Birth In Tamil)

    Growth & Development

    ஓராண்டு முடிவில் குழந்தையின் வளர்ச்சி கட்டம் (Baby Milestones in the First Year of Birth In Tamil)

    3 November 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது

    ஓராண்டு நிறைவில் குழந்தையின் வளர்ச்சியைக் காண்பது பெற்றோருக்கு மகிழ்ச்சியானதாக இருக்கும். ஒவ்வொரு குழந்தையும் தனித்தன்மை வாய்ந்தது மற்றும் அவர்கள் தாங்களாகவே வளர்வார்கள் என்றாலும், சில வளர்ச்சிகளை நீங்கள் எதிர்பார்க்கவும், உங்கள் குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சியைக் கண்காணிக்கவும் இது வாரந்தோறும் உங்களுக்கு வழிகாட்டியாகச் செயல்படும்.

    மாதந்தோறும் குழந்தையின் வளர்ச்சிக் கட்டம் (Baby Milestones by Month In Tamil)

    ஒரு குழந்தையை வளர்ப்பதில் மிகவும் உற்சாகமான பகுதி என்னவென்றால், அவர்கள் எப்படி வளர்கிறார்கள் மற்றும் விரைவாக எப்படி வளர்கிறார்கள் என்பதைக் கவனிப்பது ஆகும். குழந்தையின் வளர்ச்சியின் முக்கியமான காலகட்டம், பின்வரும் பகுதியில் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது.

    பிறந்த குழந்தைக்கான வளர்ச்சி காலகட்டம் (Newborn Baby Milestones In Tamil)

    வாரம் 1 (Week 1)

    குழந்தைகள் தங்களை கவனித்துக் கொள்பவர்களின் குரலை அடையாளம் காண கற்றுக் கொள்கிறார்கள். இது மொழி வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கிறது.

    வாரம் 2 (Week 2)

    குழந்தைகள் குறுகிய தூரத்தில் உள்ள பொருட்களின் மீது கவனம் செலுத்த ஆரம்பிக்கிறார்கள்.

    வாரம் 3 (Week 3)

    இயல்பானதுதான் என்றாலும், குழந்தைகள் அரவணைத்துக் கொள்வதை கற்றுக் கொள்கிறார்கள்.

    வாரம் 4 (Week 4)

    குழந்தையின் வளர்ச்சி காலகட்டத்தில் "கூ", "ஆ" என்ற ஒலியை எழுப்ப முதலில் கற்றுக் கொள்கிறார்கள்.

    1 மாத குழந்தையின் வளர்ச்சி கட்டம் (1 Month Baby Milestones)

    வாரம் 5 (Week 5)

    குழந்தைகளின் அசைவுகள் மென்மையாகவும் சீரற்றதாகவும் மாறும்.

    வாரம் 6 (Week 6)

    குழந்தைகள் தானாக முன்வந்து புன்னகைக்க அல்லது சிரிக்க தங்கள் முக தசைகளைப் பயன்படுத்தத் தொடங்குகிறார்கள்.

    வாரம் 7 (Week 7)

    குழந்தைகள் தங்கள் உணர்வுகளுடன் ஒலிகளை இணைக்கத் தொடங்குகிறார்கள்.

    வாரம் 8 (Week 8)

    கழுத்து தசைகள் உறுதியாக இருப்பதால், குழந்தைகள் 45 டிகிரி கோணத்தில் தலையை வைத்திருக்க முடியும் .

    2வது மாத குழந்தையின் வளர்ச்சி கட்டம் (2nd Month Baby Milestones In Tamil)

    வாரம் 9 (Week 9)

    குழந்தைகள் அதிக ஆர்வம் உள்ளவர்களாகவும், குரலை உயர்த்திப் பேசினால் ரென்பான்ஸ் செய்பவர்களாகவும் இருப்பார்கள்.

    வாரம் 10 (Week 10)

    குழந்தைகள் கூட்டத்தில்கூட தெரிந்த முகங்களை அடையாளம் காண கற்றுக்கொள்கிறார்கள்.

    வாரம் 11 (Week 11)

    குழந்தைகள் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.

    வாரம் 12 (Week 12)

    இந்த கால கட்டத்தில், குழந்தைகள் பொதுவாக தங்கள் கைகளின் செயல்பாட்டை புரிந்து கொள்ள ஆரம்பிக்கிறார்கள்.

    3வது மாதத்தில் குழந்தையின் வளர்ச்சி கட்டம் (3rd Month Baby Milestones In Tamil)

    வாரம் 13 (Week 13)

    இந்த வாரம் குழந்தையின் மிக முக்கியமான காலகட்டமாகும். சிரிப்பது, தெளிவற்றுப் பேசுவது, அமைதியாக சிரிப்பது ஆகியவற்றை குழந்தைகள் செய்யும்.

    வாரம் 14 (Week 14)

    கண்பார்க்க, கை வேலை செய்யும் காலகட்டம் இதுவாகும்.

    வாரம் 15 (Week 15)

    இந்த கால கட்டத்தில், குழந்தைகள் உருண்டு படுக்க கற்றுக் கொள்கிறார்கள்.

    வாரம் 16 (Week 16)

    கழுத்து, விலா எலும்பு மற்றும் வயிற்று தசைகள் வலுப்பெறத் தொடங்கும்.

    4th Month Baby Milestones

    4வது மாதத்தில் குழந்தையின் வளர்ச்சி காலகட்டம்

    வாரம் 17 ( Week 17)

    குழந்தைகள் அதிக குரல் எழுப்புகிறார்கள். பல்வேறு ஒலிகளை உருவாக்குகிறார்கள்.

    வாரம் 18 (Week 18)

    குழந்தைகள் தனியாக இருக்கவும் விரும்புவார்கள்.

    வாரம் 19 (Week 19)

    குழந்தைகளுக்கு ஒலிகளை படங்களுடன் இணைத்து புரிந்துகொள்ள கற்றுக் கொடுக்கலாம்.

    வாரம் 20 (Week 20)

    குழந்தைகள் தங்களை உணர்ந்து கொள்ளத் தொடங்குகிறார்கள் மற்றும் கண்ணாடியில் தங்கள் பிரதிபலிப்பைப் பார்த்து புன்னகைக்கலாம்.

    5வது மாத குழந்தையின் வளர்ச்சி கட்டம் (5th Month Baby Milestones inTamil)

    வாரம் 21 (Week 21)

    இந்த கால கட்டத்தில் குழந்தைகள் தவழத் தொடங்கும்.

    வாரம் 22 (Week 22)

    குழந்தைகள் எல்லாவற்றையும் தங்கள் வாயில் வைக்கத் தொடங்குவதால் இந்த கட்டம் கொஞ்சம் அச்சுறுத்துவதாக இருக்கலாம்.

    வாரம் 23 (Week 23)

    இந்த காலகட்டத்தில் குழந்தைகளின் மேல் உடம்பு பகுதியில் தசைகள் வலிமைப் பெறும்.

    வாரம் 24 (Week 24)

    தசை வளர்ச்சி அடையத் தொடங்குகிறது.

    6வது மாதத்தில் குழந்தையின் வளர்ச்சிக் கட்டம் (6th Month Baby Milestones In Tamil)

    இதையும் படிக்கலாமே! - குழந்தையின் வளர்ச்சி: குழந்தைகளின் வளர்ச்சி வேகம் எப்போது ஏற்படுகிறது? (Baby Growth: When do growth spurts occur in babies In Tamil)

    வாரம் 25 (Week 25)

    நடப்பது மற்றும் தவழ்ந்து செல்வது போன்ற திறன்களை குழந்தைகள் வளர்த்துக் கொள்கிறார்கள்.

    வாரம் 26 (Week 26)

    குழந்தைகள் பெற்றோருடன் அல்லது பராமரிப்பாளருடன் வலுவாக பிணைப்பை ஏற்படுத்திக் கொள்வதால் அவர்களை பிரிந்தால் சோகத்தில் மூழ்க வாய்ப்புள்ளது.

    வாரம் 27 (Week 27)

    பராமரிப்பாளர்களிடம் குழந்தைகள் அதிக நெருக்கத்தை காட்ட கற்றுக் கொள்கிறார்கள்.

    வாரம் 28 (Week 28)

    குழந்தைகள் கைகளை ஒன்றாக சேர்ந்து தட்டலாம் அல்லது தங்கள் கைகளை மிகவும் மேம்பட்ட முறையில் பயன்படுத்தலாம்.

    7வது மாதத்தில் குழந்தையின் வளர்ச்சி கட்டம் 7th Month Baby Milestones In Tamil)

    வாரம் 29 (Week 29)

    குழந்தைகள் இந்த கால கட்டத்தில் பிறருடன் பழகுவதற்கு ஏங்குகிறார்கள். ஏனெனில், அவர்கள் பிறருடன் பழக விரும்புகிறார்கள்.

    வாரம் 30 (Week 30)

    தசை வலிமை மற்றும் ஒருங்கிணைப்பு தொடர்ந்து உருவாகிறது.

    வாரம் 31 (Week 31)

    குழந்தைகளுக்கு கைகளின் பயன்பாடு இப்போது மிகவும் மேம்பட்ட கட்டத்தில் உள்ளது. இந்த காலகட்டத்தில் குழந்தைகள் பொருட்களைப் பிடிப்பதைக் கற்றுக் கொள்கிறார்கள்.

    வாரம் 32 (Week 32)

    இந்தக் காலகட்டத்தில் குழந்தைகள் கைகளின் ஆதரவின்றி எதிலும் சாய்ந்து கொள்ளத் தொடங்கலாம்.

    8வது மாதத்தில் குழந்தையின் வளர்ச்சிக் கட்டம் (8th Month Baby Milestones In Tamil)

    வாரம் 33 (Week 33)

    குழந்தைகள் தங்கள் விருப்பு வெறுப்புகளை தங்கள் சொந்த வழியில் வெளிப்படுத்தத் தொடங்குகிறார்கள்.

    வாரம் 34 Week 34)

    கால்களின் வலிமை மற்றும் ஒருங்கிணைப்பு மேலும் உருவாகிறது.

    வாரம் 35 (Week 35)

    சில குழந்தைகள் பந்து அல்லது பாட்டில் போன்ற எளிய வார்த்தைகளைப் புரிந்துகொள்ள ஆரம்பிக்கலாம்.

    வாரம் 36 (Week 36)

    குழந்தைகள் இப்போது தாங்கள் பெற்ற அனுபவங்களிலிருந்து நினைவுகளை உருவாக்கத் தொடங்கலாம்.

    9வது மாதத்தில் குழந்தையின் வளர்ச்சிக் கட்டம் (9th Month Baby Milestones In Tamil)

    வாரம் 37 (Week 37)

    இந்த கால கட்டத்தில் செயல்பாடு மற்றும் ஆர்வம் ஆகிய இரண்டும் எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்திருக்கும்.

    வாரம் 38 (Week 38)

    புதிய பொருட்களை அடைவதன் மூலமோ அல்லது முட்டிக்கொள்வதன் மூலமோ குழந்தைகள் குறும்புக்காரர்களாக மாறலாம்.

    வாரம் 39 (Week 39)

    இந்த நிலையில் உள்ள குழந்தைகள் பொதுவாக வாயில் எதையாவது வைத்துக் கொள்வது அல்லது சிறிய பொருட்களில் முட்டிக்கொண்டு நேரத்தை செலவிடுகிறார்கள்.

    வாரம் 40 (Week 40)

    குழந்தைகளை கவனிக்கவும் அருகில் இருப்பவர்களை பார்த்து அதையே செய்யவும் கற்றுக் கொள்கிறார்கள்.

    10வது மாதத்தில் குழந்தையின் வளர்ச்சி கட்டம் (10th Month Baby Milestones In Tamil)

    வாரம் 41 (Week 41)

    சுயமரியாதை என்ற கருத்து குழந்தையின் மனதில் மெதுவாக ஊர்ந்து செல்கிறது. ஏனெனில் அவர்கள் தங்களைப் பற்றி அதிகம் சிந்திக்கத் தொடங்குகிறார்கள்.

    வாரம் 42 (Week 42)

    இது தொடர்ந்து உருவாக்கப்படும் அறிவாற்றல் வளர்ச்சிக்கான ஒரு முக்கியமான கால கட்டமாகும்.

    வாரம் 43 (Week 43)

    பொருட்கள் நிரந்தரமானது என்ற கருத்தை இப்போது குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கலாம்.

    வாரம் 44 (Week 44)

    குழந்தைகள் படிக்கட்டுகள் போன்ற புதிய மற்றும் சில நேரங்களில் ஆபத்தான விஷயங்களைக் கூட ஆராய ஆர்வமாக இருப்பார்கள்.

    11வது மாத குழந்தையின் வளர்ச்சிக் கட்டம் (11th Month Baby Milestones In Tamil)

    வாரம் 45 (Week 45)

    குழந்தைகள் இப்போது தாங்களாகவே சாப்பிடத் தொடங்க ஆரம்பிப்பார்கள்.

    வாரம் 46 (week 46)

    இந்த கட்டத்தில் குழந்தையின் ஆளுமை வடிவம் பெறத் தொடங்குகிறது.

    வாரம் 47 (Week 47)

    ஆர்வம், ஆய்வு மற்றும் கருத்துக்கள் தொடர்ந்து வளர்ந்து வருகின்றன.

    வாரம் 48 (Week 48)

    குழந்தைகள் ஆதரவுடன் நடக்கத் தொடங்குகிறார்கள்.

    12வது மாத குழந்தையின் வளர்ச்சி கட்டம் (12th Month Baby Milestones In Tamil)

    வாரம் 49 (Week 49)

    அந்நியர்களைப் பற்றிய கவலை மீண்டும் குழந்தையின் மனதில் ஊர்ந்து செல்லும்.

    வாரம் 50 (Week 50)

    குழந்தைகளின் ஆற்றல்கள் எல்லையற்றவை. ஏனெனில் அவர்கள் தங்களைச் சுற்றியுள்ள உலகத்தைக் கண்டுபிடிப்பார்கள்.

    வாரம் 51 (Week 51)

    ஒருவருடைய வரம்புகளை அறிவதற்கு குழந்தைகள் முதலில் கற்றுக் கொள்கிறார்கள்.

    வாரம் 52 (Week 52)

    இந்த நேரத்தில், பெரும்பாலான குழந்தைகள் அம்மா அல்லது அப்பா போன்ற வார்த்தைகளை உச்சரித்து அழைக்கத் தொடங்குகிறார்கள்.

    இந்த வழிகாட்டி புதிதாக பெற்றோரானவர்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்க முடியும் என்றாலும், குழந்தையின் வளர்ச்சி கட்டத்தை அவர்களை கூர்ந்து கவனித்தால் மட்டுமே இன்னும் சிறப்பாக உணர முடியும்.

    TAGS :

    Baby Milestones in the First Year of Birth In English, Baby Milestones in the First Year of Birth In Hindi, Baby Milestones in the First Year of Birth In Telugu, Baby Milestones in the First Year of Birth In Bengali

    Is this helpful?

    thumbs_upYes

    thumb_downNo

    Written by

    Chandrika Iyer

    Get baby's diet chart, and growth tips

    Download Mylo today!
    Download Mylo App

    RECENTLY PUBLISHED ARTICLES

    our most recent articles

    Image related to Medications

    Medications

    கர்ப்ப காலத்தில் ஈகோஸ்பிரின் மாத்திரையை எடுத்துக் கொள்வதால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா?| Are There Any Side Effects Of Taking Ecosprin In Pregnancy in Tamil

    Image related to Pregnancy Tests

    Pregnancy Tests

    30 நாட்களில் கர்ப்பம் உறுதி செய்ய முடியுமா?|Can pregnancy be confirmed in 30 days in Tamil

    Image related to Conception

    Conception

    ஐ.யூ.ஐ (IUI) (கருப்பைக்குள் விந்தணுவைச் செலுத்துதல்) என்பது வலி நிறைந்ததாக இருக்குமா? | Is IUI (Intra Uterine Insemination) Painful in Tamil

    Image related to Home Remedies

    Home Remedies

    பச்சிளங் குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல் மற்றும் சளிக்கான 10 வீட்டு வைத்தியங்கள்-10 Home Remedies For Cough And Cold In Toddlers in Tamil

    Image related to undefined

    அண்டவிடுப்பின் காலம் - மிகவும் வளமான சாளரம், கர்ப்பத்திற்கான தடையைத் திறக்கவும் |Ovulation Period-The Most Fertile Window, Open the Roadblock to Pregnancy in Tamil

    Image related to Love, Sex & Relationships

    Love, Sex & Relationships

    பாலியல் உறவுக்குப் பிறகு கர்ப்பம் அடைவதை இயற்கையாக தவிர்ப்பது எப்படி| How To Avoid Pregnancy Naturally After Sex in Tamil

    foot top wavefoot down wave

    AWARDS AND RECOGNITION

    Awards

    Mylo wins Forbes D2C Disruptor award

    Awards

    Mylo wins The Economic Times Promising Brands 2022

    AS SEEN IN

    Mylo Logo

    Start Exploring

    wavewave
    About Us
    Mylo_logo

    At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:

    • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
    • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
    • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.