
புதிதாகப் பெற்றோரானவர்களுக்குப் இருக்கும் பொதுவான ஒரு பிரச்சனை தூக்கமில்லாத இரவுகள் என்று சொன்னால் அது மிகையாகாது. ஆம், புதிதாகப் பிறந்த குழந்தைகளைத் தூங்க வைப்பது சவாலான ஒரு விஷயம். புதிதாகப் பிறந்த குழந்தைகள் ஒரு நாளைக்கு 16-20 மணி நேரம் தூங்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால், குழந்தைகள் இதற்கிடையில் பல முறை நடுவில் எழுந்திருப்பார்கள். இதற்கு முக்கியக் காரணம் அவர்களுக்கு பசியெடுப்பது தான்.
தூங்கும் முறையானது குழந்தைக்குக் குழந்தைக்கு மாறுபடும். சில குழந்தைகள் படுக்கையில் போட்டவுடன் தூங்கிவிடுவார்கள். ஆனால், சில குழந்தைகள் தூங்குவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளக் கூடும். இன்னும் சில குழந்தைகள் ஆழ்ந்து தூங்குவதில்லை. பொறுமை, பயிற்சி இவை இருந்தால் போதும். குழந்தையை இரவு முழுவதும் எந்த வித தொந்தரவும் இன்றி தூங்க வைக்க முடியும். இதோ புதிதாகப் பெற்றோரானவர்கள் பின்பற்ற வேண்டிய 10 உதவிக்குறிப்புகள்:
தினமும் ஒரே நேரத்தில் குழந்தையை தூங்க வைப்பது, அதாவது பெரும் மாற்றம் இல்லாத படுக்கைநேர வழக்கம், குழந்தைக்கு தூங்க வேண்டிய நேரம் எது என்பதைக் காட்டும். அதாவது அந்த நேரம் வந்தவுடன் அவர்களுக்கு தூக்கம் சொக்க ஆரம்பித்துவிடும். படுக்க நேர வழக்கத்தில் குளிப்பது, கதையைப் படிப்பது, தாலாட்டுப் பாடுவது போன்றவற்றைச் செய்யலாம். அத்தகைய வழக்கம் குழந்தையை சௌகரியமாக இரவு முழுவதும் தூங்க வைக்க உதவும். எந்தவொரு பழக்கத்தையும் போலவே படுக்கைநேர வழக்கத்தையும் ஏற்படுத்த நேரம் எடுக்கும். எனவே, பொறுமையாகவும் தொடர்ந்தும் படுக்கைநேர வழக்கத்தைப் பின்பற்றுங்கள்.
உங்கள் குழந்தையைத் தட்டித் தூங்க வைத்த பின்னர் அவர்களைப் படுக்கையில் விட நீங்கள் விரும்பலாம். ஆனால், இது குழந்தை தானாகத் தூங்கக் கற்றுக்கொள்வதை கடினமாக்கும். அதற்கு பதிலாக, குழந்தை தூக்கக் கலக்கமாக இருக்கும் போது அவர்களை படுக்கையில் விடவும். இது தானாகவே எப்படி சமாதானமாவது என்றும் தானாகவே எப்படித் தூங்குவது என்றும் குழந்தை தன்னை பழக்கப்படுத்திக் கொள்ள உதவும்.
மாலை வேளையானதும், இது படுக்கைக்கான நேரம் என்று குழந்தைக்கு சமிக்ஞை செய்யும் விதமாக வீட்டில் விளக்குகளை மங்கச் செய்யத் தொடங்குங்கள். படுக்கையறை இருட்டாக இருப்பது தூக்கத்திற்கு மிகவும் உகந்தது. அறையில் முழுமையான இருளைத் தவிர்க்க, இரவு விளக்குகளைப் பயன்படுத்துங்கள்.
பெரியவர்களைப் போலவே, குழந்தைகளும் அமைதியான சூழலில் நன்றாக தூங்குவார்கள். விளக்குகளைக் குறைப்பது போலவே, மாலை வேளையாகும் போது வீட்டில் சத்தத்தையும் குறைக்கவும்.
இதையும் படிக்கலாமே! - குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கான டாப் 10 செயல்பாடுகள்(Top 10 Baby Brain Development Activities In Tamil)
இதன் பொருள் என்னவெனில் டிவி, மின்னணுச் சாதனங்கள் அல்லது முரட்டு விளையாட்டுக்கள் படுக்கைக்குத் தூங்கப் போகும் முன் கூடாது என்பதாகும். அதற்குப் பதிலாக, குழந்தையை படுக்கையில் போடுவதற்கு முன்பு, வாசிப்பது அல்லது குழந்தைகளுக்கான யோகா செய்வது போன்ற குழந்தையை அமைதிப்படுத்த உதவும் நடவடிக்கைகளைச் செய்யலாம்.
குழந்தை தூங்குவதற்கு உறுதியான மெத்தையையும் சுத்தமான விரிப்புகளையும் கொண்ட வசதியான தொட்டில் அல்லது ஒரு பக்கம் தலைமறைப்புள்ள கூடை வடிவிலான தள்ளுவண்டி சிறந்தது. அறை குளிர்ச்சியாக வைக்கப்பட வேண்டும். குழந்தைகளுக்கான ஸ்லீப்பிங் பேக்-ஐ குழந்தையைப் போர்த்தும் தளர்வான போர்வைகளுக்குப் பதிலாக பயன்படுத்தலாம். அது இரவு முழுவதும் குழந்தையைக் கதகதப்பாகவும் வசதியாகவும் வைத்திருக்கும். ஸ்லீப்பிங் பேக் பல்வேறு வகைகளிலும் பாணிகளிலும் கிடைக்கின்றன. உங்கள் குழந்தையின் எடைக்கும் உயரத்திற்கும் பொருத்தமான ஒன்றை நீங்கள் தேர்வு செய்யலாம்.
உங்கள் குழந்தையால் ஆழ்ந்து தூங்க முடியவில்லையெனில், வெண் இரைச்சல் அது நன்றாகத் தூங்க உதவும். கடைகளில் பலவகையான வெண் இரைச்சல் இயந்திரங்கள் கிடைக்கின்றன. இல்லாவிட்டால் அறையில் ஒரு மின்விசிறியை ஓட விடலாம். மீண்டும் மீண்டும் ஒலிகளைக் கேட்பது குழந்தையைத் தூங்க வைக்க உதவுகிறது. இந்த ஒலி, ஒரு மின்விசிறியின் சத்தம், மென்மையான இசை, கடிகாரத்தின் டிக் டிக் ஓசை அல்லது தாலாட்டாக இருக்கலாம். குழந்தையைத் தூங்க வைக்கும் இசைப்பாடல்கள் இணையத்தில் ஏராளமாகக் கிடைக்கின்றன.
குழந்தை இரவு முழுவதும் தூங்கிக் கொண்டிருந்தால், பாலூட்டுவதற்காக அவர்களை எழுப்ப வேண்டிய அவசியமில்லை. ஆனால், இரவு நேரத்தில் நடுவில் விழித்தெழுந்தால் அல்லது அழுதால், பாலூட்டுவது குழந்தையை மீண்டும் தூங்க வைக்க உதவும்.
குழந்தை அழும் ஒவ்வொரு முறையும் குழந்தையிடம் விரைந்து செல்ல நீங்கள் விரும்பலாம், ஆனால் இப்பழக்கம் அவர்களின் தூக்கத்தைக் கெடுத்து அவர்கள் மீண்டும் தூங்குவதைக் கடினமாக்கும். அவர்கள் பசியுடன் இல்லாவிட்டால் அல்லது டயப்பரை மாற்றத் தேவைப்படாவிட்டால், ஒரு நிமிடம் பொறுத்திருங்கள். அவர்கள் பெரும்பாலும் தானாகவே தூங்கிப்போய்விடும்.
குழந்தை இரவு முழுவதும் தொடர்ந்து தூங்க வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்ள நாட்களாகும். குழந்தை விழித்தெழுந்து பல இரவுகளில் அழும். ஆனால், விடாமல் பொறுமையுடன் இருந்தால், குழந்தை இறுதியில் அதைத் தானாகவே கற்றுக்கொள்ளும்.
புதிதாகப் பிறந்த குழந்தைகள் பகலிலும் இரவிலும் பெரும்பகுதியை தூங்கிக் கழிக்கின்றன என்றும் முதல் மாதத்தில், குழந்தைகள் 16 மணி நேரம் தூங்குவதும், சாப்பிடுவதற்காக மட்டுமே எழுந்திருப்பதும் இயல்பானது என்றும் குழந்தை மருத்துவ சங்கம் குறிப்பிடுகிறது. தூங்கும் நேரம் படிப்படியாகக் குறையும். அதன் ஆரம்ப நாட்களிலிருந்தே, இரவு தூங்குவதற்கானது என்பதைக் குழந்தை அறிந்து கொள்ள வேண்டும். தொட்டிலில் விட்டதும் தூங்குவதற்கு அவர்கள் பழக வேண்டும்.
Baby sleeping tips in tamil, How to get your baby to sleep peacefully at night In Tamil, 10 Baby Sleep Tips to Help Your Baby Sleep Through the Night In English, 10 Baby Sleep Tips to Help Your Baby Sleep Through the Night In Hindi, 10 Baby Sleep Tips to Help Your Baby Sleep Through the Night In Telugu, 10 Baby Sleep Tips to Help Your Baby Sleep Through the Night In Bengali
Yes
No















Influenza and boostrix injection kisiko laga hai kya 8 month pregnancy me and q lagta hai ye plz reply me
Hai.... My last period was in feb 24. I tested in 40 th day morning 3:30 .. That is faint line .. I conculed mylo thz app also.... And I asked tha dr wait for 3 to 5 days ... Im also waiting ... Then I test today 4:15 test is sooooo faint ... And I feel in ma body no pregnancy symptoms. What can I do .
Baby kicks KB Marta hai Plz tell mi
PCOD kya hota hai
How to detect pcos
Your body needs extra nutrition this trimester - these can help.





This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

Mylo wins Forbes D2C Disruptor award

Mylo wins The Economic Times Promising Brands 2022
Baby Carrier | Baby Soap | Baby Wipes | Stretch Marks Cream | Baby Cream | Baby Shampoo | Baby Massage Oil | Baby Hair Oil | Stretch Marks Oil | Baby Body Wash | Baby Powder | Baby Lotion | Diaper Rash Cream | Newborn Diapers | Teether | Baby Kajal | Baby Diapers Pants | Cloth Diapers | Laundry Detergent | Lactation Granules |