
நீங்கள் பெற்றோராகவோ அல்லது குழந்தையை நெருக்கமாக கவனித்துக் கொண்டு இருப்பவராகவோ இருந்தால், அவர்கள் தங்களை சுற்றியிருக்கும் விஷயங்களுடன் (சுற்றுச்சூழலுடன்) எவ்வளவு நெருக்கமாக இருக்கிறார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த நெருக்கமானது நீடித்திருக்கக் கூடியது அல்ல என்றாலும், சுற்றுப்புறத்தில் ஏற்படும் சிறு மாற்றங்கள் அவர்களை பாதிக்காது. இவ்வாறு சுற்றுச்சூழலுடன் நெருங்கி இருக்கும் அவர்கள், தங்கள் உடலைப் பொறுத்த வரையில் எவ்வளவு சென்சிடிவாக உணர்வார்கள் என்று சற்று சிந்தித்துப் பாருங்கள். குழந்தைகளுக்கு தங்கள் உடல் குறித்து எதுவும் தெரியாது; உடல் உறுப்புகள் எல்லாம் எப்படி வேலை செய்கிறது என்றும் அவர்களுக்குத் தெரியாது. அவர்கள் அழுகை, புன்னகை அல்லது உதட்டை பிதுக்குதல் போன்றவற்றின் மூலமே தாங்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை நாம் அடையாளம் கண்டு கொள்வதற்காக சிக்னல் தருவார்கள்!
குழந்தைக்கு ஒருமுறை பயன்படுத்தக் கூடிய டயப்பர்(disposable diaper) அணிவிக்கத் தொடங்கிய பிறகு, அவர்களின் லைஃப்ஸ்டைலில் மாற்றம் ஏற்பட்டுவிடும். உங்களுக்கு சற்று சவாலாக இருக்கும். ஆனால், இது குறித்து நீங்கள் உரிய ஆராய்ச்சி செய்து இருந்தால் அது உங்களுக்கு பெரிய கஷ்டமாக இருக்காது. இந்த ஆராய்ச்சிக்காக, உங்களுக்கு பொருத்தமான வழிகாட்டுதல் மற்றும் பாயிண்ட்டர்கள் தேவைப்படும்.
இந்தக் கட்டுரையை ஆழ்ந்த ஆராய்ச்சி மட்டும் சிந்தனைக்கு பிறகே நாங்கள் உங்களுக்காக வழங்குகிறோம், அதனால் நீங்கள் எங்களை தாராளமாக நம்பலாம். நீங்கள் ஒரு சூப்பர் மார்கெட்டில் குழந்தைகளுக்கான பொருட்களின் பிரிவில் இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் எதைத் தேர்வு செய்யலாம் என்று யோசித்துக் கொண்டே இருப்பீர்கள். நீங்கள் ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் கூட எந்த பிராண்டு டயப்பரை வாங்குவது என்று குழப்பத்தில் இருப்பீர்கள்; நீங்கள் எந்த முடிவுக்கும் வர முடியாமல் ஆன்லைனில் மணிக்கணக்கில் ஸ்க்ரோல் செய்து கொண்டு தான் இருப்பீர்கள். ஷாப்பிங் செய்யும் போது பெற்றோர் செய்யும் மற்றொரு தவறு ஒருமுறை பயன்படுத்தக் கூடிய குழந்தைகளுக்கான டயப்பரை கண்மூடித்தனமாக நல்ல ரிவ்யூக்களை மட்டும் பார்த்து வாங்குவதை சொல்லலாம். குழந்தைகளுக்கான டயப்பர் பேன்ட்கள் ஒவ்வொரு நாளும் உங்கள் குழந்தையின் வாழ்க்கையின் ஒரு முக்கிய பகுதியாக இருக்கும். டயப்பரைத் தேர்ந்தெடுப்பது உங்கள் குழந்தையின் தேவைகளைக் கருத்தில் கொண்டு இருக்க வேண்டும், ஒரு குறிப்பிட்ட பிராண்டின் அடிப்படையிலும் ரிவ்யூக்களின் அடிப்படையிலும் இருக்கக் கூடாது.
ஒருமுறை பயன்படுத்தக் கூடிய டயப்பர்களின்(disposable diapers) நன்மைகள் பல இருக்கின்றன. ஆனால், நீங்கள் சரியானதைத் தேர்வு செய்தால் மட்டுமே அந்தப் பலன்கள் கிடைக்கும். நீங்கள் பெரிதாக கவலைப்பட வேண்டியதில்லை; நாங்கள் இந்த செயல்முறையை உங்களுக்கு மிகவும் எளிதாக்கி இருக்கிறோம்! உங்கள் குழந்தைகளுக்கு சிறந்த டயப்பர் பிராண்டைத் தேர்வு செய்ய நீங்கள் கவனிக்க வேண்டிய முக்கிய டிப்ஸ்கள் இங்கே:
டயப்பரை வாங்கும்போது செய்ய வேண்டிய முக்கியமான விஷயம், உங்களுக்கு உண்மையில் தேவையானதைத் தேர்ந்தெடுப்பது தான். உங்கள் குழந்தையின் டயப்பர் அளவை நீங்கள் சரியாக அளவிட வேண்டும் மற்றும் தீர்மானிக்க வேண்டும் என்பதே இதற்கு அர்த்தம். குழந்தையின் எடையையும் நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். அந்த டயப்பர்களால் உங்கள் குழந்தை அனைத்தையும் சுமந்து இருப்பது போன்று உணரக் கூடாது என்று நீங்கள் விரும்புகிறீர்கள் அல்லவா. பிறந்த குழந்தைக்கு டயப்பர் பேன்ட்டுகளை தேர்வு செய்வது ஈஸியானது தான். ஏனென்றால், பிறந்த குழந்தைகளுக்கு பெரிய சைஸ்களோ எடையில் மாறுபாடோ பெரிய அளவில் இருக்காது. ஆனால், உங்கள் குழந்தைக்கு வயது கூடும் போது, அவர்கள் தொடர்ந்து அதே டயப்பர்களை உபயோகிக்க மாட்டார்கள். எனவே, ஒரு பெற்றோராக, குழந்தையின் வளர்ச்சி மற்றும் அவர்களின் இடுப்பு அளவைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு தடிப்புகள் ஏற்படுவது என்பது பெற்றோரின் மிகப்பெரிய எதிரிகளில் ஒன்றாகும். ஒரு சிறிய உராய்வால் கூட குழந்தைகளுக்கு தடிப்புகள் ஏற்படலாம். இது குழந்தைக்கு சில மணி நேரங்களுக்கு வலியை கொடுக்கும். உங்கள் குழந்தையின் தோல் எவ்வளவு சென்சிடிவானது என்பதை நீங்கள் கவனித்தால் இந்த சூழ்நிலையைத் தவிர்க்கலாம். சென்சிடிவ் அளவைப் பற்றி நீங்கள் அறிந்தவுடன், டயப்பரை தேர்வு செய்வது என்பது ஸ்மூத்தான விஷயமாகும். உங்கள் குழந்தை எத்தனை முறை மலம் கழிக்கிறது என்பதையும், அது எவ்வளவு இருக்கிறது என்பதையும் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகும். ஒவ்வொரு பிராண்டிற்கும் வெவ்வேறு ஸ்டோரேஜ் அளவுகள் இருக்கும். மேலும், கவரேஜும் மாறுபடும். இதில் நீங்கள் சமரசம் செய்ய கூடாது, ஏனெனில் இது உங்கள் குழந்தையின் செளகரியத்தை பெரிதும் பாதிக்கும்.
இதையும் படிக்கலாமே! - குழந்தைகளுக்கான டிஸ்போசபிள் டயப்பர்களை எப்போது நிறுத்த வேண்டும்
ஒரு முறை பயன்படுத்தக்கூடிய டயப்பர்கள்(disposable diapers)வாங்குவதற்கு தனி பட்ஜெட்டை ஒதுக்க வேண்டியது அவசியம் ஆகும். இதுதவிர, ஒரு குழந்தையின் ஒவ்வொரு வளர்ச்சியின் கட்டமும் நாம் கணிக்க முடியாததாக இருக்கும். உங்களுக்கு எப்போது அதிக எண்ணிக்கையிலான டயப்பர்கள் தேவைப்படும் அல்லது எப்போது தேவைப்படாது என்பதை கணிக்க முடியாது. இதற்கு தான் சரியான விலையுடன் கூடிய ஒரு பிராண்ட்டை தேடி தேர்வு செய்வது அவசியம் ஆகும். டயப்பர்கள் வாங்கும் அளவு அதிகரித்தாலும் உங்களுக்கு அதிக செலவை ஏற்படுத்திவிடக் கூடாது.
நீங்கள் தேர்வு செய்துள்ள பிராண்டுகளின் ரிவ்யூக்களை பார்த்தும், படித்தும் முடித்து பின்னர் அந்த பாயிண்டுகளை எல்லாம் மனதில் வைத்துக் கொண்டு ஒரு முடிவுக்கு நீங்கள் வரலாம். ஒரு தயாரிப்புடன் நல்ல அனுபவத்தை பெற்றோர் கொண்டிருந்தால் அவர்கள் லைஃப்சேவராக இருக்க முடியும். ஒரு டயப்பரின் மிக முக்கியமான மற்றும் பயனுள்ள அம்சங்களைப் பற்றி அவர்களால் உங்களுக்குச் சொல்ல முடியும். இது உங்கள் ஆராய்ச்சியில் நீண்ட தூரம் கொண்டு செல்லும்!
இந்த பாதையில் கணிக்க முடியாத திடீர் மாற்றங்களுடன் ஒரு நீண்ட பயணம் இருக்கும். நீங்கள் அதை வெற்றிகரமாக முடிக்க விரும்பினால், ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் ஆராய்ச்சி செய்திருந்தால், உங்கள் ஆராய்ச்சியில் எதையும் தோல்வி என்று கருதாதீர்கள். உங்கள் குழந்தைக்கு நீங்கள் ஆராய்ச்சி செய்து வாங்கிய டயப்பர்(diapers) எந்த வகையிலும் பொருந்தவில்லை என்றால், உங்களுக்கு கொஞ்சம் கஷ்டமாகத் தான் இருக்கும். ஆனால், அதனால் மனம் தளர வேண்டாம், இது நீங்கள் இன்னும் சிறப்பாக இருக்கக் கூடிய ஒரு பிராண்டை தேர்வு செய்ய வேண்டும் என்பதைக் குறிக்கிறது. நீங்கள் உங்கள் குழந்தைக்கான சரியான ஒரு டயப்பரைத் தேடும் வேலையில் ஈடுபடும்போது எதிர்மறை எண்ணங்கள் உங்களுக்குள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உங்கள் குழந்தைக்கு ஏற்ற டயப்பரை நீங்கள் கண்டுபிடிக்கும் வரை முயற்சியைத் தொடருங்கள்!
Yes
No















Influenza and boostrix injection kisiko laga hai kya 8 month pregnancy me and q lagta hai ye plz reply me
Hai.... My last period was in feb 24. I tested in 40 th day morning 3:30 .. That is faint line .. I conculed mylo thz app also.... And I asked tha dr wait for 3 to 5 days ... Im also waiting ... Then I test today 4:15 test is sooooo faint ... And I feel in ma body no pregnancy symptoms. What can I do .
Baby kicks KB Marta hai Plz tell mi
PCOD kya hota hai
How to detect pcos
Your body needs extra nutrition this trimester - these can help.




This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

Mylo wins Forbes D2C Disruptor award

Mylo wins The Economic Times Promising Brands 2022
Baby Carrier | Baby Soap | Baby Wipes | Stretch Marks Cream | Baby Cream | Baby Shampoo | Baby Massage Oil | Baby Hair Oil | Stretch Marks Oil | Baby Body Wash | Baby Powder | Baby Lotion | Diaper Rash Cream | Newborn Diapers | Teether | Baby Kajal | Baby Diapers Pants | Cloth Diapers | Laundry Detergent | Lactation Granules |