
உங்களுடைய குழந்தை வழக்கத்தை விட சீக்கிரம் பிறந்ததால், வாழ்க்கையானது உங்களை நோக்கி ஒரு வினோதமான பந்தை வீசியது போல உங்களுக்கு தோன்றலாம். உங்களுடைய குழந்தை முன்கூட்டியே பிறந்ததால், குழந்தை உங்களோடு இல்லாமல் பிறந்த குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்க வேண்டும். இதனால் நீங்கள் அடுத்தது என்ன செய்வது என்பது குறித்து மன அழுத்தத்திலும் குழப்பத்திலும் இருக்கலாம்.
இந்தக் காலக்கட்டத்தில், யாரோ உங்கள் மீது அதிகப்படையான எடை கொண்ட ஒரு மூட்டையை வைத்தது போன்ற பலதரப்பட்ட உணர்ச்சிகளை அனுபவிக்கலாம். எனவே, அதனை எல்லாம் சமாளிக்க நீங்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய சில விஷயங்களை நாங்கள் உங்களுக்காக இங்கே கொடுத்துள்ளோம். அவை உங்களுடைய மன அழுத்தத்தை போக்க கண்டிப்பாக உதவும்.
விரக்தி, சோகம், ஏமாற்றம், கோபம், அன்பு மற்றும் பதட்டம் போன்றவற்றை நீங்கள் அனுபவிக்கலாம். நீங்கள் சில சமயம் நம்பிக்கையுடனும், அடுத்த கணமே நம்பிக்கையற்றும் இருக்கக் கூடும். இந்த சமயத்தில் நீங்கள் எதை உணர்ந்தாலும் செய்தாலும் அது மிகவும் சாதாரணமானது. ஏனென்றால், இது போன்ற உணர்வுகளை குறைமாதத்தில் குழந்தை பெற்ற ஒவ்வொரு பெற்றோரும் அனுபவிக்கின்றனர்.
உங்களுடைய உணர்ச்சிகளுக்கு உண்மையாக இருப்பது நல்லது, மேலும் அதை நீங்கள் உங்களுக்குள்ளேயே வைத்திருந்தால், அது நீங்கள் தனியாக இருப்பது போன்ற அனுபவத்தை உருவாக்குவதற்கு வழிவகுக்கும். எனவே, நீங்கள் உங்களுடைய உணர்வுகளைப் பற்றி உங்களுடைய கணவர் மற்றும் குடும்பத்தினரிடம் தெரியப்படுத்துங்கள். அவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பதோடு மட்டுமில்லாமல், நிலைமையைச் சமாளிப்பதற்கும், உங்களுக்கு உதவுவதற்கும் ஏற்ற ஆலோசனையை வழங்கலாம்.
ஒருவரை ஒருவர் நம்பி இருந்தால் யானை பலம் உண்டாகும். மேலும், இது போன்ற சூழ்நிலையில் குழுவாக இருப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குழந்தை பெற்ற பிறகு உண்டாகும் உங்களுடைய மன அழுத்தம் உங்களுடைய உறவைப் பாதிக்கும் என்பதால், நீங்கள் உங்கள் கணவருடன் மனம் விட்டு பேசுவது நல்லது. அவ்வாறு உங்கள் கணவர் உங்களைப் போல் அல்லாமல், வேறு விதமாக மன அழுத்தத்தை கையாண்டால், மன அழுத்தத்தைச் சமாளிக்க ஒவ்வொருவருக்கும் தனித்தனி வழி இருக்கிறது என்பதை நினைவில் கொண்டு, நீங்கள் எப்போதும் போல் அவரிடம் மனதில் ஏற்படும் எண்ணங்களைப் பற்றி வெளிப்படையாக பேசுவது நல்லது.
இதையும் படிக்கலாமே! - கர்ப்பக்காலத்தின் 9ஆவது வாரத்தின் அல்ட்ராசவுண்ட்: என்ன எதிர்பார்க்கவேண்டும் மற்றும் இதில் அபாயம் தரும் அறிகுறிகள் யாவை?
நீங்கள் குறைமாதத்தில் பிறந்த ஒரு குழந்தைக்கு தாயாகிவிட்டால், உங்களுடைய மீட்பு மற்றும் ஹார்மோனில் ஏற்ற இறக்கம் போன்ற அனைத்து வகையான உணர்வுகளும் அதிகரிக்கலாம். உணர்வுகள் இயல்பானவை என்பதை நினைவில் கொள்ளுங்கள். மேலும், குறைமாதத்தில் குழந்தை பெற்ற ஒவ்வொரு பெற்றோரும் தங்களுடைய குழந்தை பத்திரமாக வீட்டை அடையும் வரைக்கும் இது போன்ற உணர்ச்சிகளை அனுபவிக்கிறார்கள்.
நெருக்கமான உணர்வை உருவாக்குவதற்கு, உங்களுடைய குழந்தையை அவ்வப்போது புகைப்படங்கள் எடுத்துக் கொள்ளவும். என்.ஐ.சி.யு (NICU) இல் உள்ள உங்களுடைய குறைமாத குழந்தையை புகைப்படங்கள் எடுத்து வைத்திருப்பது அவ்வப்போது அதை உங்களுக்கு நினைவூட்டுவதோடு குழந்தையின் வாழ்க்கையை தற்போதும் பிற்காலத்தில் ஏற்படும் முன்னேற்றம் குறித்தும் நீங்கள் பாராட்டுவதற்கு வழிவகுக்கும்.
ஒரு புதிய குடும்ப உறுப்பினரைப் பெறும்போது நீங்கள் தேடும் தொடக்கம் இது இல்லை என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம், ஆனால் உங்களுக்குக் கிடைத்தது மிகவும் விலைமதிப்பில்லாதது ஆகும்.
குறைமாதக் குழந்தையின் பெற்றோராக இருப்பது முதலில் கடினமாகத் தோன்றலாம். ஆனால், அந்த சமயத்தில் ஏற்படும் உணர்ச்சிகளை சமாளிக்கக் கற்றுக்கொள்வதன் மூலம், உங்களைப் போலவே இந்தச் சூழலை எதிர்க்கொள்ளும் சிறிய வயதினருக்கும் உங்களால் ஆதரவளிக்க முடியும்.
How to cope when your baby is in the NICU In English, How to cope when your baby is in the NICU In Hindi, How to cope when your baby is in the NICU In Telugu, How to cope when your baby is in the NICU In Bengali
Yes
No


















Ennoda baby
Your body needs extra nutrition this trimester - these can help.





This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

Mylo wins Forbes D2C Disruptor award

Mylo wins The Economic Times Promising Brands 2022
Baby Carrier | Baby Soap | Baby Wipes | Stretch Marks Cream | Baby Cream | Baby Shampoo | Baby Massage Oil | Baby Hair Oil | Stretch Marks Oil | Baby Body Wash | Baby Powder | Baby Lotion | Diaper Rash Cream | Newborn Diapers | Teether | Baby Kajal | Baby Diapers Pants | Cloth Diapers | Laundry Detergent | Lactation Granules |